நம்மளை மாதிரியே ஆஃபிஸில் வேலை செய்யற சில மேனேஜர்கள், எப்ப பார்த்தாலும் முதலாளி முன்னாலயே ஜால்ரா அடிக்கிற மாதிரி தெரியும். இவங்க முதலாளிகளை விட்டு விலகற மாதிரியே தெரியாது,,,
இவங்களை மாதிரி சூரியனுக்கு மிக நெருக்கமா அமைந்திருக்கும் புதன் இருக்கே, எப்பவும் வானத்தில் சூரியனோட மட்டுமே தெரியும். சில சமய்ம் காலையிலும், சில சமயம் மாலையிலும் அடிவானத்தில் தெரியும் புதன் கொஞ்சம் விசேசமான கிரகம்தான்.
என்னடா இது பாக்க நிலா மாதிரி இருக்கேன்னு யோசிக்கத் தோணுது இல்லையா?
புதனின் சுற்றுப் பாதை ரொம்பவே நீள் வட்டமானது,, இதற்கும் சூரியனுக்கும் உள்ள குறுகிய தூரம் 4.6 கோடி கிலோ மீட்டர்கள்
இதற்கும் சூரியனுக்கும் உள்ள அதிகபட்ச தூரம் சுமார் 7 கோடி கிலோமீட்டர்கள்
இது கொஞ்சமே கொஞ்சூண்டு தான் தன்னோட அச்சிலிருந்து சாஞ்சிருக்கு.. சுக்கிரனை விட இது குறைவு. இது சூரியனை ஒரு தடவை சுற்றி வர 89 நாட்களாகுது.
ரொம்ப வருச காலமா புதன் தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் காலமும் 89 நாட்கள் என்றும் நம்ம நிலாவை மாதிரி சூரியனுக்கு ஒரே முகத்தை மட்டுமே காட்டிகிட்டு இருக்கும் என்றும் நம்பிகிட்டு இருந்தாங்க,
ஆனா அது தப்பாம். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் மூலம் புதன் இரண்டு முறை சூரியனைச் சுற்றுகிற நேரத்தில் தன்னைத்தானே இரண்டுமுறை சுத்திக்கிது அப்படின்னு சொல்றாங்க
இப்போ நீங்க புதன் மேல நின்னுகிட்டு இருக்கீங்கன்னு வச்சுக்குவோம்..
சில இடங்களில் சூரியன் கிழக்கில் தோன்றி பெரிசாயிட்டே மேற்கு நோக்கி போகும். திடீர்னு கொஞ்சம் நின்னு ரிவர்ஸ் கியர்ல போகும்.
மறுபடி நின்னு கியரை மாத்தி மேற்கு நோக்கி சின்னதாகி கிட்டே போய் மறையும்
நட்சத்திரமெல்லாம் ஏறக்குறைய மூணு மடங்கு வேகத்தில நகரும்.
புதனின் ஒருநாள் என்பது அதாவது சூரியன் தோன்றி சூரியன் மறைந்து மறுபடி சூரியன் தோன்றுவது 175.84 பூமி நாட்களைக் கொண்டது.. அதாவது இது இரண்டு புத வருடங்களாகும். அதாவது புதனில் ஒரு நாளைக்கு இரண்டு வருடங்கள் காமெடியா இருக்கில்ல.. ஆனால் உண்மை..
சூரியன் சைஸ் மாறுவதும் கன்னா பின்னான்னு ஞாபக மரதி டிரைவர் மாதிரி போறதும் பார்க்க கொஞ்சம் ஜாலியாத்தான் இருக்கும். அதே சமயம் இரவும் பகலும் ஏறத்தாழ சம அளவில் இருக்கும்.
புதனுக்குத்தான் சூரிய மண்டலத்திலேயே பூமியைப் போன்ற காந்தப் புலமும் உண்டு. ஆனால் அது ரொம்பவும் குறைந்த அளவினால ஆனது.
இதுக்குக் காரணம் இதன் உட்கருவில் மிகுந்த அளவு இரும்பு இருந்தாலும் அது சற்று உருகிய நிலையில் இருப்பதால் எனக் கருதப்படுகிறது
1. மேலோடு – புதனின் மேற்பரப்பு சந்திரனைப் போலவே பல அடி வாங்கி இருக்கு,
2. மேண்டில் – உருகிய பாறைக் குழம்பு..
3. உட்கரு.. – உருகிய இரும்பு..
புதனின் துருவப்பகுதியில் பனிக்குல்லா இருப்பதாகவும் கருதப்படுது.
சரி அடுத்து நாம பார்க்கப் போறது…
நார்தர்ன் லைட்ஸ் எனப்படும் துருவ ஒளிநடனம்
கூடவே வாங்க