புதிய டெஸ்ட் அணிகள்

374

கிரிக்கெட்டில் மூவகையான போட்டிகள் நடைபெறுகின்றன. 20/20, ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டி.. டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும், ஒவ்வொரு நாடும் இலட்சியமாகக் கொண்டிருப்பர். ஒரு நாள் போட்டியில் வெளிக்காட்டப்படும் திறனடிப்படையில் டெஸ்ட் போட்டிக்கான அந்தஸ்து வழங்கப்படும். அந்த வகையில் இது வரை இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியா, சிம்பாவே, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் டெஸ்ட் கிரிக்கெட் ஆடி வருகின்றன.

2000 ஆண்டில் பங்களாதேஷ் அணி டெஸ்ட் அந்தஸ்த்தைப் பெற்ற பின். 18 ஆண்டுகளாக எந்த நாடும் அவ்வந்தஸ்தை அடையவில்லை. 18 ஆண்டுகளின் பின் இவ்வாண்டு (2018) அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் டெஸ்ட் அந்தஸ்த்தை பெற்றிருக்கின்றன.

ஆப்கானிஸ்தான் முதல் முதலாக ஜூன் 14 இல் பெங்களூரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியுடன் டெஸ்ட் போட்டியில் நுழைகிறது. கடந்த 11 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியுடன் அயர்லாந்து டெஸ்ட்கிரிக்கெட்டில் அறிமுகமாகி விட்டது.

இதுவரை காலமும் எந்த் அணியும் அறிமுக டெஸ்ட் போட்டியில் வென்றதக வரலாறு இல்லை. அயர்லாந்தும் பாகிஸ்தானிடம் தோற்றுள்ளது. ஆனாலும் பாகிஸ்தான் இவ்வெற்றியை போராடித்தான் பெற்றுள்ளது. அறிமுக போட்டியிலேயே சதமடித்து, ஆட்ட நாயகன் விருதை வென்ற கெவின் ஓ பிரைன் சாதனைப் பட்டியலில் நான்காவது இடம் பிடித்துள்ளார்.

ஜூன் 14 அன்று ஆப்கான் முதல் போட்டியில் வெல்லுமா தோற்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.