“பித்தா பிறை சூடி..” என இறைவனை
விளித்ததால் “பித்தன்” எனும் சொல்லும் மேன்மை அடைந்ததே!
இறைமகன் ஜேசுபிரான் திருவுடலை
தீண்டியதால் கழுமரமும் வணக்கத்துக்குரிய பொருளானதே!
அம்மன் அருகிருப்பதால் கொடிய
சிங்கமும் அழகாய் தெரியுதே!
“கருமை நிறக்கண்ணா…” என பாடியதால் “கறுப்பு” எனும் சொல்லில் வெறுப்பு நீங்கி விருப்பு வந்ததே!
எம் தலைவன் பெயரின் முன்னே இடம்பிடித்ததால் “மேதகு” எனும் சொல்லும் பிரவாகம் எடுக்குதே!
பிறர் வாழ தமை ஈந்த வேங்கைகளின் “செங்குருதி” பட்டதால் சாமானியன் என் கரமும் புனிதம் அடைந்ததே!
வேதங்கள் ஓதி வைத்த
மந்திரங்களையும் மீறியிங்கு
வலிகள் போக்கும் வழிகள்
திறந்ததே காண்…