ஆட்லெறிகள் ஆர்ப்பரித்த சண்டைக் காலத்தில்,…
“சல்லியர்” எமக்கும் விழுப்புண் ஏற்ற எமது வீரர்களினதும் ஒரு நேர ஆகாரமாகியே எமது இளவயதின் கொடும்பசி போக்கிய முதலிப்பழம்! 👆
அடர் அடவிகளும் அருவிகளும் சூழ்ந்த “மணலாறு” எனும் தமிழ்ரெம் இதயபூமியில்,…
“கனலாறு” பாய்ந்து கொண்டிந்த,….காலத்து
“வரலாறு” முழுமையாக எழுதப்படுமாயின்
இந்தப் பழமும் ஆங்கு இடம்பிடிக்கும்!
“ஊற்றங்கரையிலும் நீர் இருப்பீர் உலுவிந்தம் பழத்திலும் நீர் இருப்பீர்!”
எனும் புதுவைக் கவிஞரின் வரிகளில் இடம் பிடிக்கும் உலுவிந்தம் பழம் போலவே,
இந்தப் முதலி(ளி)ப்பழமும் தமிழர்தம் விடுதலைப் போராட்டத்தின் வரலாறுதனில் இடம்பிடித்து வடம் பிடிக்கும்!!!