பிரபல அமெரிக்க எழுத்தாளர் லியன் யூறிஷ்(Leon Uris) அவர்களால் எழுத்தப்பட்டது.
அமெரிக்கா உட்பட அகிலம் எங்கிலும் அதிகம் அதிகம் விற்பனையான பொத்தகங்களில் ஒன்று என புகழப்படும் பொத்தகம் Exodus ஆகும்.
ஏதிலிகளாகி பாரெல்லாம் பரந்து வாழ்ந்த யூதர்கள் தமக்கான தாயத்தை அமைக்கபட்ட இடர்கள் இப் பொத்தகம் எங்கும் விரவி உள்ளது.
1992 ஆம் ஆண்டில் இந்த ஆங்கிலப்
பொத்தகம் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது.
தமிழன்பர் திரு. வி.ஜோசெப் அவர்கள்
இந்த மொழிபெயர்ப்பைச் செய்திருந்தார்.
“ஈழநாதம்” அச்சகத்தினரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
அந்த நாட்களில் நிழலரசை நிர்வகித்தவர்களுக்கு சியோனிசக் (Zionism) கொள்கையில் ஈடுபாடு இல்லாத போதும் தாயகம் அமைக்க ஓர் இனம் கொடுத்த விலையை தமிழர் நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் இருந்தது.
பொருளாதாரத்தடை(Economic embargo) உச்சகட்டத்தில் இருந்த காலகட்டத்தில் புதினப்பத்திரிகை மற்றும் பொத்தகங்கள் அச்சிடுவதற்கான மூலப்பொருட்களுக்கும் தடை இருந்தது.
அந்த வறுமை மிகு காலத்தில் சாதாரண கொப்பித்தாளில் இந்தப் பொத்தகம் அச்சிடப்பட்டது.
இந்தப் பொத்தகம் தமிழில் வெளிவர கடுமையாக உழைத்தவர் மேஜன் அழகன்🎖 எனும் மாவீரர் ஆவார்.
– Thx you www.nolakam.org –