முப்படைகளையும் அமைத்து ஒரு நடைமுறை அரசை ஆளுகை செய்த எங்கள் விடுதலை அமைப்பின் ஒரு மிக முக்கிய தளபதி கேணல் சங்கர் ஆவார்.
தமிழர்களின் விமானப்படைத் தளபதி என்பதற்கும் அப்பால் பல விடையங்களைச் சாதித்தவர்.
மணலாறு காட்டுக்குள் எங்கள் வீரம் அடைகாக்கப்பட்ட 1988,89 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தலைவர் அருகிருந்த பெருமருந்து இவர்!
எமது மூத்த போராளிகள “திசையறிகருவிகளை (Compass) இலாவகமாக பாவிக்க கற்றுக் கொடுத்தவர்!
பூமி நிலைகாண் தொகுதி என தமிழில் அழைக்கப்படும் GPS போன்ற நவீன சாதனங்களின் வருகையுடன் சாதாரண திசையறி கருவிகள் காணாமல் போனாலும் இவரது கையில் எப்போதும் ஒரு திசையறி கருவி இருக்கும்.
ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட இவரது பாடத்திட்டங்கள் பின்னாளில் இவரது மாணக்கர்களால் புதியவர் எங்களுக்கு போதிக்கப்பட்டது.
எமது விடுதலை இயக்கத்தினால் பாவிக்கப்பட்ட பரிபாசைகள் பல இவரால் உருவாக்கப்பட்டவை.
மணலாறு காட்டுக்குள் அமைக்கப்பட்டிருந்த பல பாசறைகளின் பெயர்கள் சங்கர் அண்ணாவால் சூட்டப்பட்டவை ஆகும்.
1990ஆம் ஆண்டு மணலாறு மண்ணைவிட்டு வெளியேறி யாழ்ப்பாணத்திற்கு வந்து தனது முகாமை அமைத்துவிடடு அந்த முகாமுக்கு
“மணலாறு” எனப் பெயர் சூட்டினார்.
ஆம்,
அந்தளவு தூரம் ஆழமாக மணலாறு மண்ணை நேசித்தவர் சங்கர் அண்ணை!
வீரவணக்கம் சங்கர் அண்ணா!