தமிழனை எதிர்க்கும் பீரங்கிக் குண்டு சமையல் அறையின் முள்ளங்கித் தண்டு

தமிழேந்தி யாம் எழுச்சி கொள்ள
ஈட்டியேந்தி வீழ்ந்தனர் முன்னவர்!
வாளேந்தி வீழ்ந்தனர் முன்னவர்!
வில்லேந்தி வீழ்ந்தனர் முன்னவர்!
குண்டேந்தி வீழ்ந்தனர் பின்னவர்!
நஞ்சருந்தி வீழ்ந்தனர் பின்னவர்!
பச்சோந்திகள் அன்றும் இன்றும்
வாழ்ந்தாலும்!
வீரர்கள் நினைவேந்தி
என்றென்றும் தமிழேந்தியே வாழ்வோம் வாரீர்!
வீரவணக்கம் மாலதி அக்கா!🎖🎖🎖