ஒப்புவமை இல்லாத தமிழனாக வாழ்ந்து வழிகாட்டிச் சென்ற அமரர் திருமிகு மயில்வாகனம் பத்மநாதன் அவர்களுக்கு புகழ்வணக்கம்!

“அதிகாரங்கள், தாங்கள் புரியும் அனைத்து அராஜக செயல்களுக்குமான ஏற்பிசைவைக் கற்றவரிடையே இவ்வுலகில் உருவாக்குகின்றன.”

அல்லது,

அவர்களை மௌனம் காக்கத் தூண்டுகின்றன.”

என கொலம்பியா பல்கலைக்கழக ஒப்பியல் துறைப் பேராசிரியர் எட்வாட் சையித் கூறுகிறார்.

பேராசிரியர் எட்வாட் சையித் அவர்கள் கூறுவது போல எங்கள் தமிழ்மண்ணில் எத்தனையோ கல்வியாளர்கள் அதிகாரங்கள் புரியும் அத்தனை அராஜக செயல்களுக்கும் ஒத்திசைவாய்
வாழ்ந்து வரும் இன்றைய சூழ்நிலையில்,

விளையாட்டுத்துறை உள்ளிட்ட பல் துறைகளை கற்ற எங்கள் பேராசான் தன் வாழ்நாளில் ஒரு போதும் சிங்கள ஆட்சி அதிகாரங்களுக்கு எந்தவிதமான ஏற்பிசைவையோ ஒத்திசைவையோ கொண்டிராதவர்.

தனயனை தாயக விடுதலைக்காய் தலைவனின் பாசாறைக்கு அனுப்பி

“அறம்”தனைக் காத்த தந்தையை

“அகம்”தனில் ஆழ நினைந்து

“கரம்” தனைக் கூப்பி

“சிரம்”தனைத் தாழ்த்தி ஒன்றாகி

நிமிர்வோம்!🙏

ஒப்புவமை இல்லாத தமிழனாக வாழ்ந்து வழிகாட்டிச் சென்ற அமரர் திருமிகு மயில்வாகனம் பத்மநாதன் அவர்களுக்கு புகழ்வணக்கம்!🙏