வயாவிளான் வடமூலை உத்தரி மாதா ஆலயம் நேற்று முன் தினம் மீண்டும் திறக்கப்பட்டது.
கடந்த 28 ஆண்டுகளாக உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அடைபட்டுக் கிடந்த வயாவிளான் வடமூலை உத்தரி மாதா ஆலயம் நேற்று மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.
1990 ஆண்டு வயவையூரை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து, பூசைகள், திருவிழாக்கள் என போற்றப்பட்டு வந்து பழம் பெரும் ஆலயங்கள் பாழடைந்தன; எங்கள் தெய்வங்கள் அநாதையாகின.
தோராயமாக 28 ஆண்டுகளின் பின் இராணுவப்பிடியிலிருந்து எங்கள் மண்ணின் சிறு பகுதி விடுவிக்கப்பட்டது. விடுபட்ட பகுதிகளில் எங்கள் தெய்வங்களும் குடியேறத் தொடங்கி விட்டனர்.
அந்த வகையில் வடமூலை உத்தரி மாதா ஆலயம் திருத்த வேலைகள் முடிந்து நேற்று முந்தினம் யாழ் மறைமாவட்ட ஆயர் மதிப்புமிகு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
திருப்பலி, திருவுலா, திருவிழா என வரும் ஞாயிறு வரை உத்தரிமாதா ஆலயக் கொண்டாட்டம் தொடர்கிறது.
எங்கள் மாதா ஆலயம் திறக்கப்பட்டது போல் ஏனைய ஆலயங்களும் திறக்கப்பட்டு வயவையூர் பழையபடி செழிப்புற வேண்டும் என்பதே அனைவரினதும் ஆசையாக இருக்கும்.