தமிழில் சந்தி இலக்கணம் – 05

864

4.3. நிலைமொழி ஈற்றில் மெய்யெழுத்தும், வருமொழி முதலில் உயிரெழுத்தும் இருத்தல் (மெய் முதல் உயிர் புணர்தல், அதாவது மெய் + உயிர்)

4.3.1. நிலை மொழி ஈற்றில் க்

எ-டு:
பிளாஸ்டிக் + ல் = பிளாஸ்டிக்கால்
(க் பிறமொழிச் சொல்லின் இறுதியாக இருந்து வருமொழி வேற்றுமை உருபாக இருப்பின் க் இரட்டிக்கும்).

4.3.2. நிலைமொழி ஈற்றில் ங்

எ – டு:
மன்மோகன்சிங் + ஆல் = மன்மோகன்சிங்கால்
(ங் என்ற எழுத்தில் முடியும் பிறமொழிச் சொற்களோடு தமிழ் விகுதி இணையும்போது ங்-இன் இன எழுத்தான க் வந்து சேர்கிறது.)

4.3.3. நிலைமொழி ஈற்றில் ச்

எ-டு :
சர்ச்+ இல் = சர்ச்சில்
சர்ச் + உம் = சர்ச்சும்
(ச் பிறமொழிச் சொல்லின் இறுதியாக இருந்து வேற்றுமை உருபுகளையும், இடைச் சொற்களையும் ஏற்கும்போது இரட்டிக்கிறது.)

எ-டு:
பிராஞ்ச் + இல் = பிராஞ்சில்
(தனது இன எழுத்தாகிய மெல்லின ஞ் உடன் ச் வரும்போது இரட்டிப்பத்�ல்லை.)

4.3.4. நிலைமொழி ஈற்றில் ட்

எ – டு:
பட்ஜெட் + ஐ = பட்ஜெட்டை
பட்ஜெட் + ஆனது = பட்ஜெட்டானது
(ட் பிறமொழிச் சொல்லின் இறுதியாக இருந்து வேற்றுமை உருபுகளையும், இடைச்
சொற்களையும் ஏற்கும் போது இரட்டிக்கிறது.)

4.3.5. நிலைமொழி ஈற்றில் ண்

எ – டு :
பெண் + ஆசை = பெண்ணாசை
விண் + உலகம் = விண்ணுலகம்
(முதல் சொல் ஓரசையாகவும் அதில் வரும் உயிர் குறிலாகவும் இருந்தால் ண் இரட்டிக்கும்).

4.3.6. நிலைமொழி ஈற்றில் த்

எ – டு:
காமன்வெல்த் + இல் = காமன்வெல்த்தில்
குவைத் + உம்= குவைத்தும்
(த் பிறமொழிச் சொல்லின் இறுதியாக இருந்து வேற்றுமை உருபுகளையும், இடைச்சொற்களையும் ஏற்கும்போது இரட்டிக்கிறது.)

எ-டு:
பிரேம்சந்த் + இன் = பிரேம்சந்தின் (தனது இன எழுத்தாகிய மெல்லின ந் உடன் த் வரும்போது இரட்டிப்பத்�ல்லை.)

4.3.7. நிலைமொழி ஈற்றில் ம்

எ – டு:
அகம் +இதழ் = அகவிதழ்
புறம் + ஊர் + புறவூர்
(ம் மறைந்து, வ் என்னும் உடம்படு மெய் வருவதுண்டு.)

எ – டு:
பழம் + உற்பத்தி = பழ உற்பத்தி
கணிதம் + ஆசிரியர் = கணித ஆசிரியர்
மாநிலம் + அளவில் = மாநில அளவில்
(ம் மறைந்தாலும், உடம்படு மெய் வராமல் எழுதப்படுகிறது.)

எ – டு:
ஆயிரம் + ஆயிரம் = ஆயிரமாயிரம்
குற்றம் + அனைத்தும் = குற்றமனைத்தும்
(நிலைமொழி இறுதி மெய்யும் வருமொழி முதலிலுள்ள உயிரும் இணைந்து உயிர் மெய்யாக மாறுகிறது.)

4.3.8. நிலைமொழி ஈற்றில் ய்

எ – டு:
மெய் + அன்பு = மெய்யன்பு
பொய் + க = பொய்யாக
(முதல் சொல் ஒரசையாகவும், அதில் வரும் உயிர் குற்�லாகவும் இருப்பின் ய் இரட்டிக்கும்.)

4.3.9. நிலைமொழி ஈற்றில் ல்

எ – டு:
சொல் + அடுக்கு = சொல்லடுக்கு / சொல் அடுக்கு
பல் + இடுக்கு = பல்லிடுக்கு / பல் இடுக்கு
சொல் + ஆராய்ச்சி = சொல்லாராய்ச்சி / சொல் ஆராய்ச்சி
(ஈறிலுள்ள எழுத்து இரட்டித்த நிலையில் சேர்த்தும், இயல்பு நிலையில் பிரித்தும் எழுதப் படுகின்றன.)

4.3.10. நிலைமொழி ஈற்றில் ள்

எ-டு :
எள் + அளவும் = எள்ளளவும்
கள் + உண்ணல் = கள்ளுண்ணல்/கள் உண்ணல்
(முதல் சொல் ஒரசையாகவும், அதில் வரும் உயிர் குற்�லாகவும் இருப்பின் ள் இரட்டிக்கும்; இயல்பாக எழுதுவதும் உண்டு.)

4.3.11. நிலைமொழி ஈற்றில் ன்

1. எ – டு :
சூர்�யன் +ஆற்றல் = சூரிய ஆற்றல்
சந்திர + ஒளி = சந்திர ஒளி
(வேற்றுமை உறவு கொண்ட சொற்களின் ந் மறையும்; ன் மறைந்தாலும், உடம்படு மெய்
வராமல் எழுதப்படுகிறது)

2. எ – டு:
பொன் + ஆசை = பொன்னாசை/ பொன் ஆசை
மின் + அணு = மின்னணு / மின் அணு
மின் + அஞ்சல் = மின்னஞ்சல் / மின் அஞ்சல்
மின் + இணைப்பு = மின்னிணைப்பு / மின் இணைப்பு
(முதல் சொல் ஓரசையாகவும், அதில் வரும் உயிர் குற்�லாகவும் இருப்பின் ன் இரட்டிக்கும்; இயல்பாக எழுதுவதும் உண்டு.)

4.3.12. நிலைமொழி ஈற்றில் ஜ், ஷ், ஸ்

எ – டு:
காலேஜ் = இல் + காலேஜில்
தமாஷ் +ஆ = தமாஷாக
பஸ் + ஐ= பஸ்ஸை
(ஜி, ஷா, என உயிர் மெய்யாக எழுதப்படுகின்றன; ஸ் இரட்டித்து ஸ்ஸை வரும்)

4.4. நிலைமொழி ஈற்றிலும் மெய், வருமொழி முதலிலும் மெய் (அதாவது, உயிர் மெய்)இருத்தல் [மெய் முதல் மெய் புணர்தல், அதாவது மெய் + மெய்]

4.4.1. நிலைமொழி ஈற்றில் ண்

1. வருமொழி முதலில் க்,ச்,த்,ப்,ம் இருந்தால் மாற்றமின்றி எழுதுவதே இப்போதைய
வழக்கு.

எ – டு:
மண் + குடம் = மண் குடம்
மண் + சுவர் = மண் சுவர்
மண் + பானை = மண் பானை
கண் + மலர் = கண் மலர்

2. வரு மொழி முதலில் ந் இருப்ப்�ன், அது ண் என மாற்றமடையும்.

எ- டு:
தண் + நீர் = தண்ணீர்
விண் + நோக்கி = வ்�ண்ணோக்கி

4.4.2. நிலைமொழி ஈற்றில் ம்

1. வேற்றுமை உறவில், அடை ஏற்ற நிலையில், உவமிக்கும் வகையில் இரு பெயர்ச் சொற்கள் இணையும் போது வல்லின ஒற்று மிகும்.

எ – டு :
மரம் + கிளை = மரக் கிளை
சட்டம் + திருத்தம் = சட்டத் திருத்தம்
காலம் + சக்கரம்= காலச் சக்கரம்
நகரம் + பேருந்து = நகரப் பேருந்து
சங்கம் + பாடல் = சங்கப் பாடல்
நாகரிகம் + செயல்= நாகரிகச் செயல்

2. வருமொழி முதலில் க், ச், த், மெய்கள் உயிருடன் இணைந்து வரும்போது, நிலை மொழி ஈற்றிலுள்ள ம் அம்மெய்களின் இன எழுத்துக்களாக மாறும்

எ – டு:
மனம் + கலங்கு = மனங்கலங்கு
கடும் + சொல் = கடுஞ்சொல்
மாதம் + தோறும் = மாதந்தோறும்
நிலம் + கள் = நிலங்கள்

3. வேற்றுமை உறவில் ம் என்னும் எழுத்து மறையும்.

எ – டு:
குலம் + முறை = குல முறை
திருமணம் + வாழ்த்து = திருமண வாழ்த்து

வேற்றுமைத் தொகை இல்லாத நிலையில் ம் மறைவதில்லை

எ – டு:
மாநிலம் + முழுவதும் = மாநிலம் முழுவதும்

4. வருமொழி முதலில் ப் இருப்பின், ம் மறைவதில்லை.

எ – டு:
பெரும் + பங்கு = பெரும் பங்கு
மூன்றாம் + பிறை = மூன்றாம் பிறை

4.4.3. நிலைமொழி ஈற்றில் ய்

1. வேற்றுமை உறவில், இரு பெயர்ச் சொற்கள் இணைகையில், ய் என்பதில் முடியும்
வினையெச்சத்தின் பின்னர் க், ச், த், ப் ஆகிய வல்லொற்றுக்கள் மிகும்.

எ – டு:
பேய் + காற்று = பேய்க் காற்று
தாய் + பாசம் = தாய்ப் பாசம்
வாய் + சொல் = வாய்ச் சொல்
பொய் + தூக்கம் = பொய்த் தூக்கம்
போய் + சேர் = போய்ச் சேர்
நன்றாய் + தெரிகிறது = நன்றாய்த் தெரிகிறது

4.4.4. நிலைமொழி ஈற்றில் ர்

1. வேற்றுமை உறவில், இரு பெயர்ச் சொற்கள் இணைகையில் க், ச், த், ப் ஆகிய
வல்லொற்றுக்கள் மிகும்.

எ – டு:
நீர் + கோவை = நீர்க் கோவை
நகர் + பகுதி = நகர்ப் பகுதி
தயிர் + சோறு = தயிர்ச் சோறு
வெளிர் + பச்சை = வெளிர்ப் பச்சை
திடீர் + புரட்சி = திடீர்ப் புரட்சி
உயிர் + தோழன் = உயிர்த் தோழன்

2. வினைத் தொகையில் வல்லின ஒற்று மிகுவதில்லை.

எ – டு:
உயர் + குடி = உயர் குடி
வளர் + தமிழ் = வளர் தமிழ்

4.4.5. நிலைமொழி ஈற்றில் ல்

1. சில கூட்டுச் சொற்களில் ல் என்பது ற் என மாற்றமடையும்.

எ – டு:
நெல் + கதிர் = நெற் கதிர்
கல் + சிலை + கற் சிலை
பால் + குடம் = பாற் குடம்
கல் + குவியல் = கற் குவியல்
சொல் + செட்டு = சொற் செட்டு
சொல் + கள் = சொற்கள்
ஏற்றால் + போல் = ஏற்றாற் போல்
தகுந்தால் + போல் = தகுந்தாற் போல்

2. சில கூட்டுச் சொற்கள் இயல்பாகவும், சந்தி மாற்றத்துடனும் எழுதப்படுகின்றன.

எ – டு:
முதல் + கடவுள் = முதல் கடவுள் / முதற் கடவுள்
சொல் + பயிற்சி = சொல் பய்�ற்சி / சொற் பயிற்சி
சொல் + தொகை = சொல் தொகை / சொற்றொகை
மனத்�ல் + கொண்டு = மனதில் கொண்டு / மனதிற் கொண்டு

3. சில கூட்டுச் சொற்களில் சந்தி மாற்றம் உண்டாவதில்லை.

எ – டு:
கேட்காமல் + கொடு = கேட்காமல் கொடு
காணாமல் + போல் = காணாமல் போ

4.4.6. நிலைமொழி ஈற்றில் ழ்

1. பொதுவாக வல்லின ஒற்று மிகும்.

எ – டு:
தமிழ் + கல்வி= தமிழ்க் கல்வி
தமிழ் + செய்யுள் = தமிழ்ச் செய்யுள்
கீழ் + கூரை = கீழ்க் கூரை
கீழ் + தாடை = கீழ்த் தாடை
கீழ் + பகுதி = கீழ்ப் பகுதி

4.4.7. நிலைமொழி ஈற்றில் ள்

1. சந்தியில் ள் என்பது ட் என மாறுவதுண்டு; இயல்பாக எழுதப்படுவதும் உண்டு.

எ – டு:
திங்கள் + கிழமை = திங்கட் கிழமை / திங்கள் கிழமை
செய்யுள் + சிறப்பு = செய்யுட் சிறப்பு / செய்யுள் சிறப்பு

2. சில இடங்களில் சந்தி வருவதில்லை.

எ – டு:
மக்கள் + தொகை = மக்கள் தொகை
தோள் + பட்டை = தோள் பட்டை

3. -கள் விகுதி சேர்கையில் ள், ட் என மாறாமல் இருப்பதும், இரு வகையில் வருவதும் உண்டு.

எ- டு:
தாள் + கள் = தாள்கள்
சுருள் + கள் = சுருள்கள்
ஆள் + கள்= ஆட்கள் / ஆள்கள்
நாள் + கள் = நாட்கள் / நாள்கள்
பொருள் + கள் = பொருட்கள் / பொருள்கள்

4. நிலைமொழியின் உயிரெழுத்து குறிலாக இருகும் ஓரசைச் சொற்களில், உ சாரியையுடன் ள் இரட்டித்து ஒற்று மிகும்.

எ – டு:
கள் + கடை = கள்ளுக் கடை
எள் + பொடி = எள்ளுப் பொடி
முள் + செடி = முள்ளுச் செடி

4.4.8. நிலைமொழி ஈற்றில் ன்

1. வேற்றுமை உறவு கொண்ட சொற்களிலும், வருமொழி முதலில் ந்,ம்,வ் இருப்பினும், ன் மறையும்.

எ – டு:
அரசன் + கட்டளை = அரச கட்டளை
மன்மதன் + பாணம் = மன்மத பாணம்
அரசன் + நீதி = அரச நீதி
சந்திரன் + மண்டலம் = சந்திர மண்டலம்
சூரியன் + வழிபாடு = சூரிய வழிபாடு

2. சில கூட்டுச் சொற்களில் ன் எனும் எழுத்து ற் ஆக மாறுவதுண்டு.

எ – டு:
பொன் + காசு = பொற்காசு
முன் + காலம் = முற்காலம்
பொன் + சிலை = பொற்சிலை

3. நிலை மொழி ஓரசைச் சொல்லாக இருந்து, வருமொழி முதல்�ல் ந் இருப்பின் ன் இரட்டிப்பதுண்டு. தற்காலத்தில் சந்தியில்லாமலே எழுதும் வழக்கமும் உள்ளது.

எ – டு:
பொன் + நிறம் = பொன்னிறம் / பொன் நிறம்
முன் + நோக்கி = முன்னோக்க்� / முன் நோக்கி
பின் + நோக்கி = பின்னோக்கி / பின் நோக்கி