சக்தியும் சகதியும்.. – சமகால அரசியல்.

“உலகம் தாய்மையின் காலடியில் சுழல்கிறது”

என எங்கள் பெரும் தலைவர் சொன்ன வார்த்தைகள் என் காதில் ரீங்காரம் செய்கிறது.

“மண்” விடுதலையுடன் “பெண்” விடுதலையையும் வேண்டி நெடும் பயணம் போனவர்கள்.

நாங்கள் தாய்த்தெய்வ வழிபாட்டில் அதிகம் அதிகம் ஈடுபாடு கொண்டவர்கள்.

தமிழ்ச் சைவர்கள் “அம்மனை”யும் தமிழ்க்கிறிஷ்தவர்கள் “மாதா”வையும் அதிகம் அதிகம் மனம் விரும்பி வழிபடுபவர்கள்.

ஈழ மண்ணின் தாய்மடியாகத் திகழும்
வன்னிப்பெரு நிலப்பரப்பில் “மடுமாதா”வாகவும் “வற்றாப்பளை அம்மன்” ஆகவும் நாம் பெண்மையை போற்றி வழிபடும் பெரும் பண்பு கொண்டவர்கள்.

எம் மண்ணில் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் அல்லது ஏமாற்றம்
“தமிழர்களின் ஆன்மா”வினை மீண்டும் காயப்படுத்தி உள்ளது.

#எதேச்சதிகாரத்தை பாவிக்கும் இந்த அதிமேதவியை பேரினவாத அடிவருடியை தட்டிக் கேட்கும் தைரியம் யாருக்கும் கட்சியினுள் இல்லையா?…….!

எங்கள் புத்திஜீவிகள் இதனைத் தட்டிக் கேட்கமாட்டார்களா….?

கட்சிக்கும் அரசியலுக்கும் அப்பால் எம் இனப் பெண்ணின் நீதிக்காய் எழுவோம் எழுவோம்!🪓

பெண்ணின் பெருமையை நிலை நாட்டுவோம்! 🖌

1 COMMENT

Comments are closed.