இனத்துக்குள் இன முரண்பாடு தமிழர்க்களுக்கே தனித்துவமானது ஏனோ?

137

தமிழ்தேசியத்திற்கான பாதை
வலிமிகுந்தது…
வேதனைகள் நிறைந்திருந்தது..

முன்பெல்லாம் தமிழ்தேசியத்திற்கான குரல் எங்கு ஒலிக்கிறதோ…
அந்த இடத்தில் நாம் ஒன்றாகி நிற்போம்.. நின்றோம்…

ஆனால் இன்று ஈழத்திலும் சரி,புலத்திலும் சரி,தமிழகத்திலும் சரி
மிக மோசமாக தமிழ்தேசியம் நம்மவர்களாலேயே அவமானப்படுத்தப்படுகிறது…

தமிழர்களுக்கு தமிழர்களே எதிரியாகிக்கொண்டு போகிறோம்…

இது ஒரு போதும் விடியலை பெற்றுத்தராது…

மாறாக எமை அழிக்க வேகம் கொள்ளும்
ஹிந்திய,சிங்கள கூட்டாளிகளிற்கே
“இனத்துக்குள் இனமுரண்பாடு”
வெற்றியை கொடுத்துவிடும்..

மண் விடுதலைக்காக தம் வாழ்க்கையையே அர்ப்பணித்து உயிர்களை தியாகம் செய்த வீரர்களையும் அவர்கள் சுமந்த வேதனைகளையும் ஒரு கணம் தூய தமிழ்தேசிய சிந்தனையோடு நினைத்துப்பார்த்தால் போதும்..

எம் இனத்துக்குள் இனமான உணர்வு திடமாக வேரூண்றும்…

நாம் திடமாக கூடல் குலையாத இனமாக நிற்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவை…

அதனூடாகவே நாம் எமக்கான இருப்பை பலமாக்கி கொள்ளலாம்..

எண்ணம் – அருள் விநாயகமூர்த்தி