வறுமையான விறகுவெட்டி ஒருவர் குளத்துக்கு அருகில் நின்று விறகு வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது தவறுதலாக அவரது கோடரி குளத்துக்குள் விழுந்துவிட்டது. எவ்வளோவோ முயற்சி செய்தும் அவரால் எடுக்க முடியவில்லை. விறகு வெட்டி என்ன செய்வது எனத் தெரியாது மிகுந்த கவலையுடன் இருந்தார்.
அவர் முன் தேவதை ஒருவர் தோன்றி நடந்தவைகளைக் கேட்டார். விறகு வெட்டியின் நேர்மையை சோதிக்க விரும்பிய தேவதை, குளத்துக்குள் போய் செப்பாற் செய்யப்பட்ட கோடரி ஒன்றைக் கொண்டுவந்து இதுவா எனக் கேட்டது, விறகுவெட்டி இல்லை என மறுபடியும் குளத்துக்குள் போய் வெள்ளியால் செய்யப்படட கோடரி ஒன்றைக் கொண்டுவந்து இதுவா என கேட்டது. விறகுவெட்டி இல்லை என்றார்.
மறுபடியும் குளத்துக்குள் போன தேவதை தங்கத்தால் செய்யப்பட்ட கோடரி ஒன்றைக் கொண்டுவந்து கேட்க அதுக்கும் இல்லை என விறகுவெட்டி சொல்ல குளத்துக்குள் மீண்டும் போன தேவதை விறகுவெட்டியின் உண்மையான கோடரியைக் கொண்டுவந்து காட்ட இதுதான் என் கோடரி என விறகுவெட்டி சொன்னார்.
விறகுவெட்டியின் நேர்மையை போற்றி தங்கம், வெள்ளி, செப்புக் கோடரிகளைப் பரிசாகக் கொடுத்தது தேவதை.
நீதி. குழந்தைகளே! எந்த நிலையிலும், எச் சூழ்நிலையிலும், எந்த சந்தர்ப்பத்திலும், நேர்மை தவறக் கூடாது என்பதை மனதில் வைத்திருப்போம்.