அடுத்தது நாம பார்க்கப் போறது சனிக்கிரகம்.
மந்தன் என அழைக்கப்படும் சனிக்கிரகம்தான் பழங்காலத்தில் அறியப் பட்ட வெகு தூரத்தில் இருந்த கிரகம். இடுப்பில ஒட்டியாணத்தோட ஒய்யாரமா நடை போடுற சனிக்கிரகம்
சனிக்கிரகம் இருப்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே மக்களுக்குத் தெரியும்.
சனிக்கிரகம் சூரிய குடும்பத்தில் இரண்டாவது பெரிய கிரகம் ஆகும். அளவில் இது பெரிசா இருந்தாலும் அடர்த்தியில் இது மிகவும் குறைவானது.
இந்தச் சனிக்கிரகத்திற்கு 34 பெயரிடப் பட்ட சந்திரன்களும், மொத்தமாய் 61 சந்திரன்களும் நூற்றுக்கணக்கான துணைக்கோள் துகள்களும் (வளையங்களில் உள்ளவை) கொண்டது.
சனிக்கிரகத்தின் வளையங்கள் ரொம்ப சுவாரஸ்யமானவை.. இப்ப கூட 2009 அக்டோபர் ஆறாம் தேதி, புதுசா பெருசா ஒரு வளையத்தைக் கண்டு பிடிச்சு இருக்காங்க.. இதோட சேர்த்து சனியோட வளையங்களை எட்டா பிரிக்கிறாங்க.
சனிக் கிரகம் ஒரு வாயுக் கோளமாகும். வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் ஆகிய நான்கு கோள்களும் வாயுக் கோளங்களே. இம்மாதிரி ராட்சச வாயுக் கோள்களை ஜோவியன் பிளானட்ஸ் (அதாவது ஜூபிடரைப் போன்ற கோள்கள்) என அழைக்கிறார்கள். எப்படு பூமி மாதிரி அளவும், திடமான மேற்பரப்பும், வளிமண்டலமும் கொண்ட கோள்களை எர்த் லைக் பிளானட்ஸ் என அழைக்கிறார்களோ அப்படு ஜோவியன் பிளானட் என்றால் வியாழனைப் போன்ற பெரிய அள்வும், வாயுக் கோளமாகவும் இருக்கும் கோள் என்று அர்த்தம்.
சனிக்கிரகம் உயரம் குறைந்து இடைபெருத்த லொள்ளுவாத்தியார் மாதிரியான உருவம் கொண்டது ஆகும். அதாவது வடக்கிலிருந்து தெற்காக இது 54,364 கிலோமீட்டரும், கிழக்கிலிருந்து மேற்காக இது 60,268 கிலோமீட்டரும் ஆரம் கொண்டது.
இந்த வடிவத்துக்குக் காரணம் மைய விலக்கு விசை / மற்றும் குறைந்த சனியீர்ப்பு விசை ஆகியவை ஆகும். சனிக்கிரகம் பூமியை விட 95 மடங்கு எடையில் பெரிசு..
ஆனால் அளவிலோ 764 மடங்கு பெருசு…(9.5 மடங்கு பெரிய விட்டம் கொண்டது சனிக்கிரகம்)
பக்கத்தில பக்கத்தில வச்சா எப்படி இருக்கும் தெரியுமா?
சனிக்கிரகத்தின் உள் அமைப்பைப் பத்தி தெளிவா தெரியாட்டியும், ஒரு அனுமானம் உண்டு…
அதனுடைய் உட்புறமும் நம்ம வியாழன் மாதிரி ஒரு சின்ன பாறையாய் இறுகிய உட்கருவும், அதைச் சுற்றி ஹைட்ரஜனும் ஹீலியமும் அடர்ந்த திரவ வடிவிலும்(உலோக ஹைட்ரஜன்) அதன் மேல் திரவ வடிவலான ஹைட்ரஜனும் ஹீலியமும், அதன் மேல்புறம் சுமார் 1000 கிலோமீட்டர் உயரத்துக்கு வாயு வடிவலான ஹைட்ரஜனும் இருக்கறதா நினைக்கிறாங்க.
பூமிக்கு வெப்பம் எங்கிருந்து கிடைக்குது அப்படின்னா சூரியனில் இருந்துன்னு சொல்வோம். ஏற்கனவே வியாழனில் பார்த்தோம் வியாழன் எவ்வளவு வெப்பத்தை சூரியனிடம் இருந்து வாங்குதோ அவ்வளவு உள்புறமிருந்தும் சூடாகுது அப்படின்னு. அதாவது வியாழக்கிரகம் வருஷத்துக்கு 2 செ.மீ சுருங்குது அப்படின்னு படிச்சொம்.
சனிக்கிரகம் சூரியனில் இருந்து பெறுகின்ற வெப்பத்தை விட 2.5 மடங்கு வெப்பத்தை வெளிய விடுது.
இதுக்குக் காரணம் ஒண்ணு குருவில் இருக்கிர மாதிரி கெல்வின் ஹெச்மோட்ஸ் நிகழ்வு அப்படிங்கற நிகழ்வு.. அதவாது ஈர்ப்பு விசையால் கிரகங்கள் மெல்ல சுருங்க ஆரம்பிப்பது.
சனிக்கிரகத்தில் கூடுதலாக எடை அதிகமுள்ள ஹீலியம் எடை குறைவான ஹைட்ரஜனுக்குள் மழைத்துளி மாதிரி இறங்குவதால் இன்னும் கொஞ்சம் வெப்பம் அதிகமா உண்டாகுது.
சனிக்கிரகம் தன்னைத் தானே சுத்திக்க எடுத்துக் கொள்ளும் நேரம் 10 மணி 34 நிமிஷம். ஏற்கனவே அஸ்ட்ராய்ட் பெல்ட்டைப் பற்றி பார்த்தப்ப சனிக்கிரகம் சூரியனில் இருந்து சராசரியாக 1.400,000,000 கிமீதூரத்தில் இருக்குன்னு பார்த்தோம். இது சூரியனைச் சுற்றிவர 10759 நாட்கள் எடுத்துக்குது. (29-1/2 வருடம்)
நம்ம சந்திரன் நம்மைச் சுற்றி வருதே 27 நாட்களுக்கு ஒருமுறை.. அப்ப சந்திரன், சூரியனுடன் ஒப்பிடும் பொழுது சூரியனுக்கும் நமக்கும் ஒரே நேர்கோட்டில் தெரிய ஆகும் இடைவெளி எவ்வள்வு ? 29-1/2 நாட்கள்.. இதை சைனோடிக் பீரியட் அப்படின்னு சொல்வாங்க.
இதே மாதிரி புதன் 116 நாட்களும், வெள்ளி 584 நாட்களும், செவ்வாய் 780 நாட்களும், குரு 399 நாட்களும், சனி 378 நாட்களும் இது மாதிரி தெரிய எடுத்துக்கும். காரணம் இது பூமி சூரியனைச் சுற்றுவதற்கும் மற்ற கிரகங்கள் சூரியனைச் சுற்றுவதற்கும் உள்ள கால வித்தியாசங்கள்..
சனிகிரகத்திற்கும் காந்தப் புலம் உண்டு. ஆனால் அது பூமியின் காந்தப் புலத்தை விட வலிமை குறைந்தது. குருவில் உண்டாகிற மாதிரியே மெடாலிக் ஹைட்ரஜன் திரவ ஹைட்ரஜன் உராய்வினால் இந்த காந்தப் புலம் தோன்றுது.
என்னங்க ஒரே வறட்சியா இருக்கேன்னு பார்க்கறீங்களா? என்ன் செய்யறது.. அங்கதான் தண்ணியே இல்லையே…
கொஞ்சம் கலர் ஃபுல்லா மாத்தட்டுமா? சனியின் படங்களைப் உத்துப் பாருங்க.. நாம படம் போடும் போது அவுட்லைன் போடற மாதிரி நீலமா ஒரு அவுட் லைன் தெரியும் பாருங்க… நீலமா தெரியுதா? சனிக் கிரகம் நாம பூமியில் இருந்து பார்க்கும் பொழுது இப்படிக் கருநீலமாத்தாங்க தெரியும். பெரிதாக்கிப் பார்க்கும் போதுதான் உள்ள இருக்கிற அந்த காவி- ஆரஞ்சு கலர் கொஞ்சமா தெரியும்,..
குருவில் பார்த்தமே அதே மாதிரி சனியிலும் பட்டைகள் உண்டு.. ஆனால் அதெல்லாம் ரொம்ப லைட்டா இருக்கும்… அதை அப்புறமா பாக்கலாம்…