எங்கள் மூச்சான மேந்தருக்கு 31 ஆம் நாள் நினைவு வணக்கம்

83

.
தாயாகி இறைவன்
பூமி வந்தான் என்பார்கள்
தாய்க்கே தாயாகி
இறைவனுக்கும் நீ மேலானவனே..!

தூரமாகித் தாயருகில் இல்லாத காலங்களிலும்
அரூபனாய் தாயவளை தாங்கிய தனயனே..!

இதயத்தின் துடிப்பாக அன்னையைக் கொண்டவனே..!
அன்னைக்கு ஒன்றென்றால்
கனவில் கண்டு சொல்வாயே..!

தாயைக் காக்க நீ கவசமாய் ஆனாயோ..!

தந்தையை மந்திரமாய் சிந்தையில் கொண்டவனே..
உந்தையே அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு
விண்ணென உயரமாய் உயர்ந்து நின்றவனே..

தந்தை தன் நாட்குறிப்பை
உன் கையில் தந்தாரே..
அத்தனையும் உள்ளெடுத்து
உயிராக வாழ்ந்தாயே..

தந்தை தனிய என்றா
தரணி விட்டு சென்றாயோ..

அண்ணைக்கு ஒன்றென்றால்
உன்னைக் கொடுப்பாய் என்பாயே..
அடிவாழை அவனென்று
அண்ணன் மகனைச் சொல்வாயே..

பெறாமக்கள் ஆனாலும்
என் மக்கள் போலென்பாயே..
பொன் மகள்கள் எந்நாளும்
நலம் வாழ நினைப்பாயே..

மனம் வாட வைத்து நீயும்
மறையாகிப் போனதேனோ..?

அக்காமார் என்றாலும்
அம்மா போல் என்பாயே..
அன்பென்றால் அவர்கள் தான்
அகராதி என்பாயே..

அடித்தாலும் இடித்தாலும்
இசையாகி மகிழ்வாயே..
கடிந்தாலும் நொடிந்தாலும்
மழையாகிப் பொழிவாயே..

தமக்கையர் துயரடைந்தால்
உளம் குமுறத் துடிப்பாயே
அவர்தம் துயர் களையத்
தவியாய் தவிப்பாயே..

அடிவயிறு வலியெடுக்க
அழவைத்து எங்கு சென்றாய்..

தங்கை என் மனச்சாட்சி
என்றுரைத்துச் சிரிப்பாயே..
கள்ளத்தனங்கள் புரிந்தவற்றை
சொல்லிச் சொல்லி மகிழ்வாயே..

தக்கதோர் துணை சேர்ந்ததாய்
தமையனாய் நெகிழ்வாயே.
பக்கபலமாய் நானிருப்பேனென
தகைவனாய் வாழ்ந்தாயே..

தவிக்கின்றாள் பாருமையா
தங்கையவள் உனை இழந்து..

மறுமக்கள் என்றாலே
மனம் பூக்கும் என்பாயே..
நறுமணமாய் அவர் வாழ்வில்
நானிருப்பேன் என்பாயே.

உயரங்கள் அவர்கள் தொட
தோள் கொடுத்து நின்றாயே..
துயரங்கள் அவர்களை விட
வாள் எடுத்து நின்றாயே..

சிகரமாய் நானிருப்பேன்
தீபமாய் நீ இருந்து
உறவுக்கும் ஊருக்கும்
ஒளியூட்டச் சொன்னாயே..

மின் மினியாய் நீயாகி – அவர்
தம் இருட்டை விரட்டியவரே..
ஒளியிழந்த மெழுகாகி
உருகுகிறார் பாருமையா..

மணவறை சேர்ந்தவரை
மனவறையில் கடைசிவரை சுமந்தவரே..
சிவசக்தி என்றாலே
நீர்தானே நினைவில் வருவீரே..

உள்ளத்தில் பிள்ளைகளை
சொத்தெனப் பொறித்து வைத்தீர்
நல்லவராய் பிள்ளைகளை
சொந்தமெல்லாம் போற்ற வைத்தீர்..

நட்பென்றால் மேந்தன் என்று
இலக்கணம் வகுத்து வாழ்ந்தீர்
உற்றவன் இவனென்று
உலகமே இயம்ப வாழ்ந்தீர்

நல்லவன் இவனென்று
நானிலம் போற்ற வாழ்ந்தீர்
நற்குணங்கள் குடையாக்கி
மனமெல்லாம் ஆட்சி செய்தீர்

 

மனமிறுகி வேண்டாதார்
உயர்வுக்கும் நீர் உழைத்தீர்..
ஊருக்கும் உறவுக்கும்
உதவவும் நீர் உழைத்தீர்..

கற்பித்த பள்ளிக்கு
சங்கம் வைத்து பலம் சேர்த்தீர்
கற்றலே சிறப்பென்று
அங்கும் உருகி நின்றீர்..

உழைப்பால் உயர்ந்தவரே
உழைப்புக்கும் உமைப் பிடிக்கும்..
அதனால்தான் உழைக்கையிலே
உலகை விட்டு நீர் சென்றீர்..

பணியிடத்தை கோவிலென
பாவித்து வாழ்ந்தவரே
பணி நிலத்தை வீழ்ந்து வணங்கி
விடை பெற்றுச் சென்றீரோ..

மூலவராய் நீரிருக்க
உற்சவராய் நாமிருந்த கோவிலய்யா எம் குடும்பம்.
மூலவரே கோவில் விட்டு
காலமாகிப் போனதேனோ..

காற்றாகி எம்மருகில்
நீரிருப்பீர் நம்புகின்றோம்..
மூச்சாகி எம்முயிரை
தாங்கி நிற்பீர் வேண்டுகின்றோம்..