வயாவிளான் பூனையன் காட்டுச் சுடலை மீளுருவாக்கப் பணிகள் துவங்கப்பட்டது.

182

பூ வெட்டிக் காட்டுச் சுடலை என்றழைகப்பட்ட வயாவிளான் இந்து மயானம் மருவி பின்னாளில் பூனைக்காட்டுச் சுடலை என்றானது.

பூனையன் காட்டுச் சுடலை என்றழைக்கப்படும் வயாவிளான் இந்து மயானத்தின் மீளுருவாக்கப் பணிகளை வலி.வடக்குப் பிரதேச சபை நேற்று ஆரம்பித்தது.

விடுவிக்கப்பட்ட பூ வெட்டிக் காட்டுச் சுடலை பாவனைக்கு உகந்த நிலையில் இல்லாமையை இட்டு மீள் குடியேறிய வயவர்களும் புலம்பெயர் வாழ் வயவர்களும் விசனமும் கவலையும் கொண்டிருந்தனர்.

வலி.வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் திருவாளர் சுகிர்தன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தரணிவாழ் வயவர்கள் மெய்நிகர் கலந்துரையாடலின் போது மயானம் பற்றிய தங்கள் ஆதங்கத்தை வயவர்கள் வெளிப்படுத்தி இருந்தனர்.

மக்கள் பாவனைக்கு உகந்த வகையில் வயாவிளானின் சுடுகாட்டைத் திருத்தித் தருவதாக தவிசாளர் அவர்கள் கரிசனையுடன் அக்கலந்துரையாடலின் போது தெரிவித்திருந்தார்.

அஞ்சலி அயலூர் அரசியல் அருள் அறிவியல் அறிவியல் மைல்கல் அவலம் ஆன்மீகம் இனவழிப்பு இயற்கை இலங்கை ஈழம் ஒற்றுமை ஓயாத அலைகள் களமருத்துவம் கவிதை கவிதைகள் கார்த்திகை குடாரப்பு சமூகம் சாவு அறிவித்தல் தமிழர் தமிழ் தலைவர் தாயகம் திலீபன் துயர் பகிர்வு தேசம் தேசியம் நினைவேந்தல் நீத்தார் நினைவுகள் பழமொழிகள் பால்ராஜ் பிரிகேடியர் பெண்கள் மருத்துவம் மருத்துவர் மாவீரம் மாவீரர் முள்ளிவாய்க்கால் வயவையூர் வயாவிளான் வாழ்த்து விடுதலை வீரம்

இந்நிலையில் வயாவிளான் மீளெழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினரின் முயற்சியின் பயனாக வட மாகாணசபையினரும் சுடுகாட்டைப் பார்வையிட்டு சுடுகாட்டை மீளுருவாக்கம் செய்ய மேலதிக நிதியை ஒதுக்கீடு செய்தனர்.

மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டுடன் வலி.வடக்குப் பிரதேச சபையினரும் நிதியினை ஒதுக்கீடு செய்து வயாவிளானின் சுடுகாட்டை மீளுருவாக்கம் செய்து சுற்று மதில் அமைத்து மக்கள் பாவனைக்கு விரைவில் கொடுக்கப்படும் என்று நேற்றைய தினம் மீளுருவாக்கப் பணிகளைத் தொடங்கிய வலி.வடக்குப் பிரதேச சபையினர் தெரிவித்திருந்தனர்.