தேதி இல்லாக் குறிப்புகள் – வயவையூர் ஞானவைரவர் கோவிலும் கிருபானந்த வாரியாரும்

01) அச்சுவேலியூர் சின்னமணி
ஐயாவின் வில்லுப்பாட்டு!

02) அளவெட்டியூர் சின்னமேளம்!!

03) ஈழநல்லூர் அருணா
இசைக்குழுவின் கானமழை!!!

03) ஏழாலையூர் ஆத்மஜோதி
முத்தையாவின் ஆன்மீகச்
சொற்பொழிவு!!!

04) கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி எனும் இரட்டையின் நாதஷ்வர இசை!

எனப் பற்பல நினைவுத் திறவுகோல்கள் எந்தன் நினைவுப் பெட்டகத்தின் சாரளங்களை சட்டென அடித்தே
அகலத் திறக்கின்றன!

ஆடலும்பாடலும்எங்கள்முந்தையரின்வழிபாட்டுமுறைகள்ஆகும்.

ஆடலசனாகிய சிவனின் ஆடலும்
வேங்குழல் எடுத்து ஊதும் கண்ணனின் கானமும் அதனையே எமக்கு உணர்த்தி நிற்கின்றன.

ஆதலினால்தான் வயவையூரின்வடிவு மிக்க வழக்கத்திலும் ஆடலும் பாடலும் இடம்
பெற்றிருக்கின்றன.

அஃதே,

ஆடல் பாடலுக்கு முத்தாய்ப்பாக ஆன்மீகச்
சொற்பொழிவுகளையும் செவிகள்
குளிரக் கேட்பது பெருவயவர்களின் ஞானச்செருக்கிற்கு வளம் சேர்த்தன.

ஆம்,

ஆன்மீகச் சொற்பொழிவாளர்களில் சில சொற்பொழிவாளர்கள்
ஆண்டவனின் அருள் வாக்குகளையும், நல்ல முன்னெதிர்வுகளையும் சொல்வதுண்டு.

கூடவே சிலர் நகைச்சுவையான செய்திகளையும் சொல்வதுண்டு.

அத்தகைய அரும்பெரும் சொற்பொழிவாளர்களில் திருமுருக கிருபானந்த வாரியார் முக்கியமானவர் ஆவார்.

அவருடைய சொற்பொழிவுகள் ஆன்மீகச் சொற்பொழிவுகளாக இருப்பினும் அதையும் நகைச்சுவையாகச் சொல்லும் திறன் அவரிடம் அதிகமாக இருந்தது.

தென்வயவையின் அருள்மிகு ஞான வைரவர் கோவிலில் ஓர் (7ஆம் திருவிழா) திருவிழாவிற்கு வரவழைக்கப்பட்டார்.

நாங்கள் பேராவலுடன் எதிர்பார்த்தது போல அன்றும் நகைச்சுசை ததும்ப சொற்பொழிந்தார்.

எங்களை அரும்பெரும் கருத்துக்களாலும், நகைச்சுவையாலும் நிறைத்தார்.

நகைச்சுவை கலந்து ஊட்டப்பட்ட கருத்துக்களாதலால் ஆண்டுகள் பல வேகமாகக் கழிந்தாலும் நினைவுகள் சில சாகாவரம் பெற்று நிற்கின்றன.

நன்றி

– வயவையூர் அறத்தலைவன்-