நேயம் பொங்கிட நேர் குமரேசனும்
தேயம் போற்றிடக் கல்வியைத் தேடிப்பின்
தாயின் மானங் காத்திடுந் தனையனாய்
பாயும் வேங்கைகள் புக்கனன்.
நல்ல கல்வியை நாடியே இந்துவில்
வல்லனாகக் கற்றபின் வாய்ந்த போர்
எல்லை மீட்கவென்றே மணலாறு புக்
கொல்லை நீசரை ஒட்டி விரட்டினான்.
வீரம் மிக்க விறல் மணலாற்றுமர்
தீரம் காட்டிய சீர் குமரேசனும்
போரில் இன்னுயிர் நீத்துப் புகழுடல்
சேரவே நின்றவன் சிந்தை மறக்குமோ.
பாழியற்றிடும் பாதகர் மாண்டிட
வாழியெங்கள் மாவீரர் வலிமைசேர்
ஆழி போற்றமிழ் அன்னையும் வாழியே
வாழிய வாழிய பல்லாண்டு வாழியவே.