வேலுப்பிள்ளை ஐயாவுடன் வேலாயுதபிள்ளை ஐயாவும் சொர்க்கமதில் ஓய்வு கொள்ளட்டும்!

தனது இரண்டு தனயன்களைத் தமிழினத்தின் விடுதலைக்காய் ஈந்த
புதிய புற நானூற்றுத் தந்தை இவர் ஆவார்!

வைத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த காலத்தில் ஆற்றிய கருமங்கள் காரணமாக இந்த உத்தமரும் உலகத் தமிழினத்தால் போற்றப்படுகின்றார்!

தமிழினத்தின் ஒப்பற்ற மூத்த தளபதி பிரிகேடியர் தீபன் அவர்களுக்கு இந்தத் தந்தை தொட்டிலில் சூட்டிய பெயர் “பகீரதகுமார்” என்பதாகும்.

ஆம்,

அந்தக் காலத்துப் பகீரதன் போல எங்கள் காலத்துப் பகீரதன் ஆகாய கங்கையை பூமிக்குக் கொண்டு வரவில்லையானாலும் தமிழினத்திற்குப் பற்பல வெற்றிகளை அடுத்தடுத்துப் பெற்றுத் தந்தார்.

மண்கிண்டிமலை முதல் மருதங்கேணி வரை நீண்டு நிமிர்ந்த பல சாதனைச் சமர்களின் வெற்றிகளுக்குச் சொந்தக்காரன்.

புளியங்குளத்தில் எழுதப்பட்ட புதிய
புறநானூற்றின் நடுநாயகன்.

வழமை போலவே ஆனந்தபுரத்திலும் எங்கள் அண்ணா பகீரதன்
பெரு வெற்றிகாய் பகீரதப்பிரயத்தனப்பட்டார்!

அந்த “இமாலய முயற்சி”யிலேயே
எங்கள் பகீரதன் அண்ணா
வீரசொர்க்கமும் எய்தினார்!

நிற்க,

வீரத் தந்தையே சொர்க்கமதில்
ஓய்வு கொள்ளுங்கள்! 🙏