நினைவை நிறைக்கும்-தமிழர்தம் வானத்து நிலவுகள்!

காங்கேயனூர் ‘கேதீஷ்வரன்’ தொண்ணூறாம் ஆண்டில் ‘மலரவன்’ ஆகினன்!

அஃதே,

தெல்லியூர் ‘கலாரூபி’ தொண்ணூற்றியாறாம் ஆண்டில் ‘பிரியவதானா’ ஆகினள்!

தாரளமாய் தன்னலம் கருதாது தமிழரினம் தளைத்தோங்கிட கண் துஞ்சாது உழைத்தனர்!

மெய்வருத்தம் பாராது; அல்லும் பகலும் மகத்தான மருத்துவப்பணி புரிந்தனர்!

இலட்சியத்தால் ஒருமித்தவர்கள் – பின்னாளில்
கருத்தில் ஒருமித்த காதலரும் ஆகினர்!

புதுக்குடியிருப்பூரில்இரண்டாயிரத்தியோராம் ஆண்டில் கைத்தலம் பற்றியே காணரும் மண இணையரும் ஆகினர்!

தமிழூர்கள் எல்லாம் தங்கள் பொற்தடங்கள் பதித்தே கிரிவலம் வந்து இன்னுயிர்கள் பல காத்தனர்!

எம்மவர் உயிரும் காத்தனர்! தமிழர்தம் உயர் விழுமியமாய் எதிரியின் உயிரும் காத்தனர்!

உயிர் காத்திடும் அதியுன்னத தங்கள் பணியிலேயே தம்முயிர்களை ஈந்து “தமிழ்வானில் நீடு நிலைத்தனர்” காண்!

-வயவையூர் அறத்தலைவன்-