பாரதத்திற்கு அன்னை திரேசா போல ஈழத்திற்கு கட்சன் அம்மையார்.

பாரதத்தில் ஓர் அன்னை திரேசா போல எங்கள் கிளிநொச்சியில் எங்களுக்காக வாழ்ந்தவர் கட்சன் அம்மையார். இன்று போர்வெற்றிச் சின்னங்களால் நிரப்பப் பட்டிருக்கும் கிளிநொச்சி முல்லைதீவு மண்ணில் மக்களுக்காக உள்ளத் தூய்மையோடு பணி பெருக்கி வாழ்ந்து விண்ணேகிய பலருக்கு அவர்களின் ஞாபகமாக ஓர் சிறுகல்லைக் கூட நாட்டிட முடியாத நிலையில் தமிழர்கள் உள்ளனர்.

“கருணா நிலையம்” என்ற சிறுவர் இல்லத்தை நிறுவியவர் இந்த கட்சன் (MISS MURIEL VIOLET HUTCHINS) அம்மையார். கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியின் அதிபராக இருந்து ஓய்வு பெற்றவர்!  ஆதரவற்ற மற்றும் வறிய நிலையில் இருந்த பிள்ளைகளுக்கு உணவு, உடை, உறையுளுடன் கேடில் செல்வமான கல்வியையும் தந்தருளினார் தங்கமனம் கொண்ட இந்த அம்மையார்.

இறக்கும் வரை அந்தப்பிள்ளைகளை விட்டு ஓர் கணமும் நீங்காமல் பணிப்பெருக்கி வாழ்ந்தார். “கருணா இல்லத்திலேயே” இவ்வையக வாழ்வை நீக்கி விண்ணேகினாலும் எம் மனங்களில் வாழ்கிறார்.

Life becomes an adventure when one ceases to live himself or herself! எங்கள் மண்ணில் மக்கள் தொண்டின் உச்சத்தைத் தொட்ட இந்த அன்னை  ஐக்கிய இராச்சியத்தின் வேல்ஸில் 07/03/1899 ஆம் ஆண்டு அவதரித்தவர்.

இத்தாலிய நாட்டைச் சேர்ந்த Constantine Joseph Beschi என்ற இயற்பெயருடைய வீரமாமுனிவர் மதம் பரப்புவதற்காகவே தமிழகம் வந்தார். தனது பணியை திறம்பட சுதேசிகளுக்கு எடுத்துச் சொல்லவே எம் செம்மொழியைக் கற்றுத்தேறினார். எங்கள் செம்மொழியின் செழுமை கண்டு தேனில் மயங்கிய வண்டானார். மென்மேலும் தமிழைப் பயின்று தமிழறிஞர் ஆனார். தமிழில் “தேம்பாவணி“(His biggest poetical is the Thembavani)என்ற புத்தகத்தையும் எழுதினார்.

அது போலவே கல்விப்பணியும் இறைபணியும் செய்த கட்சிசன் அன்னையும்  தமிழ் தேசத்தின் ஆதரவற்ற சிறுவர்களின் நலனை தனது நலனிலும் மேலாகக் கொண்டார். அன்றைய நாட்களில் ஐக்கிய இராச்சியத்தின் மிகப்பிரபலமான ஒஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் (University of Oxford)பட்டம் பெற்றவர்.

அங்கிலிக்கன் மிஷனரிகளின் மத மற்றும் கல்விப் ப்பணிகளுக்காக எங்கள் மண்ணில் தடம் பதித்தவர். அந்நாட்களில் பெருமளவானவர்களுக்கு   கல்விக் கண்களைத் திறந்துவிடும் பெரும்பணி செய்தவர்.

கட்சிசன் அம்மையார் 1996 ஆம் ஆண்டு கிளிநொச்சி மண்ணிலேயே உயிர் துறந்தார். இறப்பின் பின் தனது உடலை தகனம் செய்து அஸ்தியை தமிழ் மண்ணில் ஓடும் நதி மீது கலக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அதற்கிணங்க கிளிநொச்சி மாநகரின் வனப்புக்கு காரணமவுள்ள இரணைமடுக் குளத்திலிருந்து செல்லும் கால்வாயில் கலக்கப்பட்டது.

உச்சி மீது வான் இடிந்து வீழ்வது போல எங்கள் தேசமெங்கும் குண்டுகள் வீழ்ந்து வெடித்த நேரங்களில் தான் பிறந்த நாட்டுக்கோ அல்லது இலங்கைத்தீவின் பாதுகாப்பான பகுதிகள் என்று கருதப்பட்ட வேறு இடங்களுக்கோ செல்லாமல்  
எம் மண்ணில் நின்று எம் தேசத்துக் குழந்தைகளுக்கு உணவுடன் சேர்த்து கல்வியையும் ஊட்டியவர் கட்சிசன் அம்மையார்!

மறவோம் மறவோம் – நின் ஈகத்தை!

MISS MURIEL VIOLET HUTCHINS

07.03.1899 – 04.03.1996

This Great Mother should be commemorated with a statue in Our Soil!

🙏தமிழ் தேசத்தின் அன்னை தொடர்பான உங்களின் அனுபவங்களையும் தகவல்களையும் இங்கே பதிவு செய்யுங்கள் எனதருமை நண்பர்களே!

      நன்றி

– வயவையூர் அறத்தலைவன் —