தமிழர் நாகரிக வரலாற்றின் பிறப்பு 11100 ஆண்டுகளுக்கு முன்..

178

தமிழகம் மதுரை உச்ச நீதிமன்றில், தமிழக ஆதிச்ச நல்லூர் தொன்மம் கி.மு.1000 ஆண்டுக்குரியதாக இந்திய நடுவண் அரசு பதிவு செய்துள்ளது.

தமிழர் தொன்ம நாகரிகங்களை, அதை இட்டிய தொல்லியல் ஆய்வுகளை இருட்டடிப்புச் செய்து வரும் இந்திய நடுவண் அரசு இதை மட்டும் எப்படி இந்தளவு வெளிப்படையாக ஒப்புக் கொண்டது?

இதே நடுவண் அரசு இற்றைக்கு 18 ஆண்டுகளுக்கு முன் பூம்புகார் நாகரிகத்தை ஆய்வு செய்ய விரும்பிய, இங்கிலாந்து கடலியல் ஆய்வாளர் Graham Han Cock இற்கு நிதி கொடுத்து உதவிட மறுத்தது.

ஆனாலும் பன்னாட்டு ஊடகங்கள் சிலவற்றினதும், தொல்லியல் ஆய்வு ஆர்வலர்களின் பங்களிப்புடனும், நடுவண் அரசின் அனுமதியுடன் ஆய்வுகளை மேற்கொண்டார்.

இவ்வாய்வின் போது, பூம்புகார் கடலின் 3 கிலோ மீற்றர் ஆழத்தில் பெரிய வணிக நகரமும், துறைமுகங்களும் இருந்ததைக் கண்டு பிடித்துக் காட்சிப்படுத்தினார்.

கடலடியில் கிடைத்த ஆதாரங்களின் படி பூம்புகார் பட்டிணம் 11100 ஆண்டுகள் பழமையானதென கிரகம் அவர்கள் வெளிப்படுத்தினார்.

இவ்வாய்வின் முடிவினை டர்ஹம் பல்கலைக் கழகப் பேராசிரியர் கிளன் மில்னே வேறு கடலாய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு உறுதிப்படுத்தியும் உள்ளார்.

இன்னும் ஆழத்தில் ஆய்வுகளை மேற்கொண்டால், மேலும் பல உண்மைகளைக் கண்டறியலாம் எனவும் பூம்புகார் பட்டிணத்தின் உண்மையான வயதை அறியலாம் எனவும் தெரிவித்த கிரகம் அவர்கள், போதிய நிதி கிடைக்காமையாலும், வேறு நெருக்கடிகளாலும் பூம்புகார் ஆய்வை கைவிட்டார்.

பூம்புகார் பட்டிணம் 11000 ஆண்டுகள் பழைமையானவையாக ஆய்வுகளால் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அதை இந்திய அரசு உத்தியோக பூர்வமாக பதிவு செய்யவில்லை. ஊடகங்களில் கூட அவை வெளி வரவில்லை. பி.பி.சி போன்ற ஒரு சில சர்வதேச ஊடகங்கள் மட்டும் செய்தியாக வெளியிட்டன.

உண்மை இவ்வாறிருக்க, இந்தியாவில் தமிழனின் தொன்மம் வெறும் 3000 ஆண்டுகளே என ஆவணப்படுத்தும் செயற்பாடுகள் திட்டமிட்டு செயற்படுத்தப்படுகின்றன. அவ்வகை செயற்பாடுகளில் ஒன்றுதான் மதுரை உச்ச நீதி மன்றில் இந்திய நடுவண் அரசு ஒப்புக் கொண்ட ஆதிச்ச நல்லூரின் வயது 3000 ஆண்டுகள் என்பது..

துவாரகாப் பட்டிணம்  11000 ஆண்டுகள் தொன்மமானதென ஆவணப்படுத்தப்பட்டுருப்பது இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

குறிப்பு:- இணைக்கப்பட்டுள்ள ஆங்கில நாளேட்டின் நிழற்படம்  விபரம் சொல்லும்.