வரலாற்றுப் புகழ்பூத்த குடாரப்பு தரையிறக்க பங்காளி மேஜர் லக்சனா!

மண்டியிட்டது சிங்களம் என்ற சேதி வந்த போது எந்தன் தோழியும் மண்ணுக்காய் மாண்டாள் எனும் சேதியும் வந்தது!

‘பூ’மாலையை தோழி – நீ
எதிர்பார்க்கவில்லை!

‘பா’மாலையை தோழி – நீ
எதிர்ப்பார்க்கவில்லை!

‘பொன்னாடை’யை தோழி – நீ
எதிர்பார்க்கவில்லை!

‘மகரயாழ் விருதை’தோழி – நீ
எதிர்பார்க்கவில்லை!

‘பல்கலைக்கழக கௌரவ
டாக்டர் பட்டம்தனை – நீ
எதிர்பார்க்கவில்லை! – ஏன்

‘தமிழீழத்தின் உயர்விருதான
“ஒளி_ஞாயிறு”🎖விருதைத்தானும் – நீ
எதிர்பார்க்கவில்லையே!

உந்தன் பாதங்களை யாரும்
தொட்டுவணங்க வேண்டுமென – நீ
எதிர்பார்க்கவில்லை!

உந்தன் கல்லறைகளை நாங்கள்
கண்ணீரால் கழுவ வேண்டும் எனவும்
எதிர்பார்க்கவில்லை!

தோழியே!🎖

மரபுவழிப் படையான மாலதி படையணியின் மகத்தான அணித்தலைவியே!

கடல்வழி குடாரப்பில் இறங்கி சூழ்பகை வென்று ஆனையிறவு ஊடாக தரைவழி வன்னிக்கு வருவேன் என
சூளுரைத்தவளே!

எந்தன் மண்ணின் உயர் விருதான
“ஒளிஞாயிறு”விருதுக்குரிய தோழியே!

உந்தன் பாதச்சுவடுகளைத் தொடர்ந்து “சுதந்திர வாசல்”தனை தமிழரினம் அடையும் என்றே எதிர்பார்த்தாய்!

அந்த எதிர்பார்ப்பினை அடையும் எல்லா வழிகளிலும் உன்னினம் உழைத்தபடியே உள்ளது.

ஒத்தோடிகள்,அறுத்தோடிகள்
கூத்தாடிகள்,குழப்புவாதிகளின் சதிவலையில் சிக்காமல் ஒன்றுபட்ட மக்கள் இலக்கை நோக்கி பயணப்பட்ட வண்ணமே உள்ளனர்.

தோழியே!

எம் மண்மடியில் அறிதுயில் கொள்ளும் தோழியே உந்தனுக்கு எங்கள் வீரவணக்கம். 🎖