மண்ணின் மறத்திக்கு வீர நினைவாஞ்சலி

478

01.02.1998 அன்று கிளிநொச்சி நகர் மீட்பில் தன்னுயிர் ஈந்து ஈழ விடுதலையில் ஆகுதியான, வயவையின் மறப்பெண் கரும்புலி கப்டன் செங்கதிர் வீரகாவியமானார்.

ஜெயரட்ணம் ஜெயேந்திரா என்ற இயற்பெயர் கொண்ட இந்த மறத்தி வயவையின் பெருமையாவாள்.

வீரவணக்கங்கள் எங்கள் மண்ணின் பெண்ணே..

வயவையின் வீர மங்கையே
உன் புகழ் வாழ்க

ஈரைந்து மாதங்கள் இன்பவலி அனுபவித்து
உனைப் பிரசவித்தாள் உன் தாய்..
தன்குருதி பாலாக்கி ஊட்டிய உன் தாய்;
தமிழினச் சிறப்பினையும் கலந்தூட்டி வளர்த்தாள்.



உன் தோழர் விளையாடி மகிழ்வுற
நீயோ
எம்மின மக்கள் நிலைகண்டு
நெஞ்சம் குமுறினாய்..

இளமைப் பருவத்தில்
ஆயிரம் இன்பக்கனவுகள் ஊற்றெடுக்க அனைத்தையும் அழித்து
எம்மின விடுதலையை இதயத்தில் வளர்த்தாய்..

இன விடுதலை வேண்டி
போர்க்களம் சென்றாய்


சிந்தையில் இன விடுதலையும்
செயலில் வீரத்தினையும் வெளிக்காட்டினாய் .



பண்டைத் தமிழச்சி முறம் (சுளகு) கொண்டு புலி விரட்டினாள் – அவள்
வழி வந்த நீயோ
உயிர் கொண்டு பகை விரட்டினாய்..

.
அடக்கி ‘அழிக்கும்’ அரக்கர்கள்’
ஓரடிகூட வீர மண்ணில் படக்கூடாது
எனக் கருதி
‘உனதுயிரை விடுதலைத் தீயில் இட்டாய்

ஈழம் காத்திட உன் உயிர் நீத்த வீர மகளே 
எக்காலமும் உனை மறவார் வயவை மக்கள்..

ஆக்கம் 
வ.பொ.சு—மாரிட்டி மண்ணின் மைந்தன்

1 COMMENT