தமிழர் நிழல் அரசு (Defacto Government of Tamil People)தன் நிர்வாகக் கட்டமைப்புகளை செவ்வனே செயற்படுத்திய காலம் போர்க்காலம் ஆகும். 

தமிழர்களின் கௌரவம் பேணப்பட்ட அந்தக்காலம் ஓர் பொற்காலம் எனலாம்.



கதிர்காமத்துக்கோ அல்லது வேறு கோவில்களுக்கோ மடிப்பிச்சை எடுப்பவர்களைத் தவிர எங்களின் வீதிகளில் பிச்சை எடுப்பவர்கள் என்று எவரையும் காணமுடியாது.



கைவிடப்பட்ட குழந்தைகளைக் வீதிகளில் காணமுடியாது.

கைவிடப்பட்ட வயோதிபர்களையோ மனநோயாளிகளையோ வீதிகளில் காணமுடியாது.

புலத்திலிருந்தவர்களின் உழைப்பும், தளத்திலிருந்தவர்களின் உழைப்பும் ஒரு புள்ளியில் சந்தித்த போது அது அப்போது சாத்தியமாயிற்று.



நிற்க, இனி கிளிநொச்சி மாநகரில் எடுக்கப்பட்ட இப்படத்தின் கதைக்கு வருவோம்!

பிச்சை எடுப்பவர்களையும், 
ஒற்றைக்கதவை மெதுவாகத் திறந்து ஒரு பேணி அரிசி இட்டு மீதிக்கு பேசிக்கலைக்கும் காட்சியை நினைவுபடுத்தும்,…

 இக்காட்சியின் பின்னணிக் கதைச் சுருக்கம் என்ன?

சர்வதேசத்திடம் உயிர்ப்பிச்சை கேட்டோம்!

 ஆம், பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களை கிளி, முல்லை, வவுனியா வடக்கு, மன்னார் மேற்கு போன்ற பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அரசு 2008 இல் அறிவித்தது.

நிகழப்போகும் பேரவலத்தை முன்னுணர்ந்த மக்கள் அவர்களின் வாசல் சென்று அவர்களை வெளியேற வேண்டாம் என இறைஞ்சிய கொடுங்காட்சி இது..