எலும்புகளைப் பாதுகாப்பது எப்படி?

உடம்பு எனும் கட்டடத்தைத் தாங்கும் கம்பிகள் எலும்புகளே. எலும்புகள் பலவீனமாகும் போது உடலே ஆட்டங்கண்டு விடும்.

முதுமையில் எலும்புகள் பலவீனமடையும். எமது தவறான நடத்தைகளால் இளவயதிலேயே எலும்புகள் பலவீனமாவதும் உண்டு. இளவயதில் எலும்பு விடயத்தில் அக்கறை காட்டினால் முதுமையில் கூட எலும்புகள் உறுதியாக இருக்க வாய்ப்புண்டு.

எலும்புகளின் உறுதிக்குக் கல்சியமும் விட்டமின் டீயுல் அவசியம். பால், பாற்பொருட்கள், கீரைகள், புரோக்கோலி, கொண்டைக்கடலை, பீன்ஸ் போன்ற கல்சியம் மிகுந்த பண்டங்களை சின்ன வயதிலிருந்து உட்கொண்டு வந்தால் எலும்புகள் உறுதி பெறும்.

உப்பை அதிகம் உட்கொள்வதால் சிறுநீரகத்தின் வழியே கல்சியம் வெ்ளியேற்றப்பட்டு, எலும்புகள் பாதிக்கப்படும். எனவே உணவில் உப்பை குறைவாகப் பயன்படுத்த வேண்டும்.

புகைத்தலும் மது அருந்தலும் கல்சிய இழப்பைத் தூண்டி எலு்ம்புகளை பலஹீனமாக்கும். அதே போல் சோடாப்பானம் பருகுவதும் எலும்புகளுக்கு ஆபத்தனது. சோடாப்பானம் சிறுநீரகத்தில் அதிக கல்சியம் சேரக் காரணமாகும். இதனால் சிறுநீரகக் கல் ஏற்பட்டு அதன் மூலம் எலும்புகளுக்குப் பாதிப்பு உண்டாகும்.

கோப்பியில் இருக்கும் கஃபீன் உடலிலிருந்து கல்சியத்தை உறுஞ்சும். இதனால் கல்சியக் குறைவு ஏற்பட்டு எலும்புகள் நலிவுறும். நாளொன்றுக்கு இரண்டு குவளை கோப்பியோடு நிறுத்துவது எலும்பின் ஆரோக்கியத்துக்கு நன்று.

இவ்வுணவுப் பழக்கங்களோடு எலும்பை உறுதியாக்கவல்ல உடற்பயிற்சிகள், விளையாட்டுகளை அன்றாடம் செய்ய வேண்டும். இவ்வாறு கட்டுப்பாட்டுடன் இருப்போமேயானல் முதுமையிலும் எலும்பு உறுதியாக இருக்கும்.