நாள் : 64
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : புதல்வரைப் பெறுதல்
செய்யுள் : 4
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
இனியது என்ன? அமிழ்தே இனியது என்பர். அதை விட இனியதும் உள்ளது.
குழந்தைக்கு உணவைச் சிறுவட்டிலில் வைத்துக் கொடுத்தால் அது என்னென்ன செய்யும். கையால் அரைக்கும், தூக்கிச் சிதறடிக்கும் வாயிலிட்டுத் துப்பும். மண்ணிட்டு பிசையும் நீரைக் கவிழ்க்கும்.
கைய்யில் இன்னும் எதாவது கிடைத்தால் அதையும் சேர்த்துப் பிசையும்.
இத்தனை விசயத்தையும் வள்ளுவர் இரத்தினச் சுருக்கமாக சொல்லும் விதம் சிறுகை அளாவிய கூழ்.
அதுவே அமிழ்தினும் இனிது என்கிறார் வள்ளுவர்.
அந்த காலத்திலேயே திருவள்ளுவருக்கு தெரிந்திருக்கிறது. குழந்தை மிச்சம் வைக்கும் சாப்பாட்டை அப்பாவிற்குத்தான் போடுவாங்க என்பது.