வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க – கனிமீட்

259

இப்ப கனிமீடைப் பார்ப்போம்.

தெரியுமா? கனிமீட் தான் சூரியக் குடும்பத்தின் மிகப் பெரிய சந்திரன். இது செவ்வாய் கிரகத்தின் அளவில் முக்கால் பங்கு இருக்கும்.

இது புதன் கோளை விடப் பெரியது.

சந்திரன்களுக்கே உரிய கொத்தல் கொத்தலான முகம்கொண்ட இந்த கனிமீட் கலிலியோ கண்டு பிடித்த நான்கு குரு சந்திரன்களில் ஒன்று. இது குருவை 7.154 நாட்களுக்கு ஒரு முறை சுத்தி வருது. இது தன்னைத்தானே சுத்திக்கிற வேகமும் அதேதான்.

இந்த மாதிரி தன்னைத் தானே சுத்திக்கிற வேகமும் இன்னொன்றை சுத்தற வேகமும் ஒண்ணா இருந்தா அந்த கோள் / துணைக்கோள் அது சுத்தி வர்ர கோளின் அல்லது நட்சத்திரத்தின் முழு பிடியில் இருக்கிறதாச் சொல்லலாம்.

தன்னைத் தானே சுத்துகிற வேகம் மாறுபட்டு இருந்தால் அந்தக் கோள் துணைக்கோள் வேறுவிதமான பெரிய இடித்தல்களுக்கோ அல்லது தாய்க் கோளின் அல்லது நட்சத்திரத்தின் முழுப் பிடியில் இல்லாமலோ இருக்குன்னு சொல்லலாம்.

இதனுடைய விட்டம் 5264 கி.மீ. ஆனால் இது எடை குறைவான சந்திரன். இதனுடைய மேற்பகுதி 70 டிகிரி கெல்வினில் இருந்து 152 டிகிரி கெல்வின் வரை வெப்பமுடியதா(????) இருக்கும்

இது ஜீபிடர்ல இருந்து 10 இலட்சத்து 70 ஆயிரதி 400 கி.மீ தூரத்தில் சுத்தி வருது,

முதல்ல இந்த கனீ மீட்ல மணலும் தண்ணியும் மட்டுமே இருக்கும்னு நினைச்சாங்க. இதனோட வளிமண்டலத்தில (துளியூண்டு வளிமண்டலம்) ஆக்சிஜன் இருக்காம்.

ஆனால் வாயேஜர் போயி ஆரய்ட்சி செஞ்சப்பதான் இங்க காந்தப் புலமும் இருக்குன்னு கண்டு பிடிச்சாங்க. இதனால் கன்மீடோட உட்கருவில் உலோகம் இருக்கலாம் என்று கணிச்சாங்க.

கனிமீடோட காந்தப் புலத்தை படத்தில் பார்க்கலாம்.

இதை வச்சிப் பார்த்தா கனிமீடோட உள்ளமைப்பு இப்படி இருக்கும்

[media]http://upload.wikimedia.org/wikipedia/commons/0/0e/PIA00519_Interior_of_Ganymede.jpg[/media]

உள்ளே உலோகக் கரு. அதன் மேல் சிலிகாவினால் ஆன மேண்டில். அதற்கு மேல் நீர். அதற்கு மேல் உறைந்த நீர்.

உலோகக் கரு 250 லிருந்து 800 கி.மீ வரை விட்டம் இருக்கலாம்.

கைனிமீடின் மேற்பரப்பு இருவகையாக இருக்கிறது. குண்டும் குழியுமான பழமையான பரப்பு

வரிகளோடிய இளைய நிலப்பரப்பு

[media]http://www2.jpl.nasa.gov/galileo/ganymede/P47064.full.jpeg[/media]

நம்ம சந்திரனைப் போல இல்லாமல் இங்க இருக்கற குழிகள் அதிகம் தட்டையாக இருக்கு. ஒரு விண்கல் விழுந்தா அதைச் சுற்றி ரிம் மாதிரி உருவாகும் மலைகள் இங்கே இல்லை. காரணம்தான் சொல்லி இருக்கமில்ல.. தண்ணீர்.

பூமியைப் போல கன்மீடின் மேலோட்டிலும் டெக்டானிக் பிளேட்டுகள் இருக்கலாம் என எண்ணப்படுகிறது.. புத்தககங்களை அடுக்கி வச்சி சரிச்ச மாதிரி இருக்கிற இந்த அமைப்பு அதனால்தான் அமைந்திருக்கும் அப்படின்னு நினைக்கிறாங்க.

[IMG]http://pds.jpl.nasa.gov/planets/images/browse/jupiter/ganscarp.jpg [IMG]

கனிமீடோட வடதுருவம் ரொம்பவே அடி வாங்கி இருக்கு. தென் துருவம் கொஞ்சம் குறைவாத்தான் அடி வாங்கி இருக்கு.