ரூபவாகினி செய்திச் சேவைகளூடாகவும் தேர்தல் சுவரொட்டிகளிலும் பத்திரிகைகளிலும் சந்திரிகா அம்மையாரை நீண்ட கால இடைவெளியின் பின் தமிழினம் கண்டு கொண்டது.
உலகிலேயே அதிக பொய்களைக் காவுகின்ற ஶ்ரீலங்காவின் ஊடகங்கள் வழியேதான் வடகிழக்கில் வாழ்ந்த தமிழர்கள் அம்மையாரைப் பார்த்தனர்.
இடதுசாரிச் சிந்தனை நிரம்பிய அமரர்.குமாரணதுங்கா அவர்களின் சகி ஆரம்பத்தில் அன்னைதிரேசா போலவே தெரிந்தார். அகிலம் கொண்டாடும் அன்னை திரேசா போலவே நீலம் வெள்ளை நிறமும் கொண்ட சேலையுடுத்தி அன்பாய் பேசி அசத்தினார்.
முகமெல்லாம் சிரித்தபடி கரம் கூப்பிக் கொண்டே ஒரு சமாதான தேவதையாகவே அரசகட்டில் ஏறினார்.
அந்த நேரத்தில் ஏறத்தாழ நாற்பது வருடகாலம் கழிந்திருந்த அடிப்படைப் பிரச்சனைக்கான தீர்வை ஓரம் கட்டினார்.
1990 ஆம் ஆண்டு மிகத் தீவிரமாக அமுலாக்கம் செய்யப்பட்ட பொருளாதார தடைகளை (Economic embargo) இல்லாமல் செய்வேன் என்றார்.
1994 ஆம் ஆண்டு பொருளாதாரத் தடையை மெல்லத் தளர்த்தியபடி “தீர்வுப்பொதி” ஒன்று உள்ளதென பூச்சாண்டி காட்டியபடியே இராணுவ முன்னெடுப்புக்களையே திரைமறைவில் செய்து கொண்டிருந்தார்.
மீண்டும் யுத்தம் வெடித்த போது முன்னேறிப்பாய்தல் எனும் பெயரில் இராணுவ நடவடிக்கை(Operation Leap Foreword) செய்து நவாலித்தேவாலயம், நாகர்கோவில் பாடசாலை ஆகியன மீது விமானக்குண்டுகளை வீசி பிஞ்சுகளை கொடூரமாகக் கொன்று தனது பொய்யான முகமூடி கிழித்தாள்.
ஆம்,
அப்பொழுதுதான் அவள் அரக்கப் பெண் என சாமானியர் எமக்கு புரிந்தது.
மூச்சுவிடாமலே சிறிது கால இடைவெளியில் எமை சூரியக்கதிர்- 1,2,3 எனக் கட்டங்கட்டமாய்சு ட்டெரித்தாள்.
மீதமான உயிர்களை செம்மணியில் பதைக்கப் பதைக்கப் புதைத்தாள்.
செறிவான ஆட்லெறி, அஞ்சிஞ்சி எறிகணைத் தாக்குதலை பல மணி நேரம் தொடர்ச்சியாக ஏவிவிட்ட பின்னரே இராணுவம் முன்னேறி எமது இடங்களை ஆக்கிரமித்தது.
அதே போல புக்காரா, சுப்பசொனிக் போன்ற விமானங்கள் மூலம் பல்லாயிரம் பொது மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.
“தமிழினத்தின் காலாச்சாரத் தொட்டில்” எனச் மூதறிஞர்களால் வியந்து போற்றப்படும் யாழ்ப்பாணத்தின் முகம் கோரமாகச் சிதைக்கப்பட்டது.
ஆம்,
ஜனாதிபதியாகிவிட்ட சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சரான மாமன் அநுரத்த ரத்வத்தையுடன் இணைந்து தமிழ்மண்ணில் செய்த அட்டூழியங்கள் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருந்தது.
தமிழினத்தின் ஆன்மா பலமாக புண்பட்டிருந்த அந்தக் கொடிய காலகட்டத்தில் இம் மாநிலத்தில் எமக்காய் குரல் கொடுக்க யாரும் இல்லையா என ஏங்கினோம்.
எட்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி ஈனக்குரல் எழுப்பிய நேரம் தாய்த்தமிழகத்தின்
மூத்த பழுத்த அரசியல்வாதிகள்கா துகளில்பெ ன்னம்பெரிய கதவு போட்டிருந்தனர்.
அந்த நேரத்தில் “யான் இருக்கின்றேன்” என குரல் கொடுத்து எங்கள் சோதரன் அப்துல் ரவூப் தனது உயிரை ஈழத்தமிழினத்துக்காய் ஈந்தான்.
தமிழ்தேசிய ஆன்மீகம் சுடர்விட தனை ஈந்த ஈகைப் பேரொளியை
“அறம்” காத்த சகோதரனை
“அகம்” தனில் நினைந்து
“கரம்”தனைக் கூப்பி
“சிரம்” தனை தாழ்த்தி
வென்றாக வேண்டும் என நினைந்து
ஒன்றுபட்டு நிமிர்வோம்!🙏