தமிழின் பரண்கள் நிறைந்து வழிந்த போது,
“எழுத்தாணி” எனும்
ஏணி கொண்டு எம் – முந்தையர்
ஏடுகளில் இறக்கி வைத்த அரும் பெரும் பொக்கிசங்கள்
ஏராளம் ஏராளம் ஆனாலும்
எரித்தழிக்கப்பட்டவை போக
மீதமான பொக்கிசங்களினைத்
தேடித் தேடியே பயணப்பட்டு
கண் எனக் காத்திடும்
நம்மவர் பணி அளவிடற்கரியது!
பொன் பொருளுடன் பரம்பொருளின் அருள் தேடும் நம்மவரின் சாதாரண சிந்தனையிலிருந்து ஓலைச் சுவடிகளையும் தொன்மை இலக்கியங்களையும் தேடிய பயணம் இது ஆகும்!
கல்லும் முள்ளும் நிறைந்த இக்கடின பயணத்தில் தமை அர்ப்பணித்திருக்கும்
நூலக நிறுவனத்தின் அனைத்துப் பணியாளருக்கும் திருமிகு தில்லைநாதன் கோபிநாத் (ThillainathanKopinath) அவர்களுக்கும் வீர’வயவர்’களின்
கோடி நன்றிகள்!🙏
– வயவையூர் அறத்தலைவன் –