வயவைக்கு அறிவை வழங்கிய ஆசான்களில் ஒருவர், முன்னாள் முதல்வர், குருநாதர் கதிரேசு அவர்களின் சாவானது வயவர்களின் மனதை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
உலகத்தை நிலை நிறுத்தி வைத்திருப்பவர்களில்ஆசிரியர்களும்உழவர்களும் முதன்மையானவர்கள்.
உழவர்கள் உணவை அறுவடை செய்து
ல்உலகைக் காக்கின்றனர். ஆசிரியர்கள்
நல்ல ஆளுமையுள்ள மக்களை
உருவாக்கி உலகை உயர்த்துகின்றனர்.
உழவர்கள்மண்ணைப் பண்படுத்தி விதையிடுகிறார்கள் ஆசிரியர்கள் மாணவர்களின் மனங்களைப் பண்படுத்தி அறிவை விதைக்கிறார்கள்
அன்னார் இவ்விரு பாத்திரங்களையும்பொறுப்பேற்று இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ்ந்தவர். வயவர்களின் ஆரம்பக்கல்விக்கு அடித்தளம் அமைத்தசிறீவேலுப்பிள்ளை வித்தியாசாலையில்இவர் முதல்வராக இருந்த காலத்திலேயேமானம்பராய் பிள்ளையாரின் கட்டிடப்பணிகளும் ஆரம்பித்திருந்தன.
இதில்தன்னை முழுமையாக ஈடுபடுத்தியஇவர் தனது மாணவர்களையும் இப்பணிக்கு உள்வாங்கத் தவறவில்லை.
மாணவர்களைக்கொண்டு தேவாரங்களை பாடவைத்தும் , அறப்பேச்சுக்களை மனனம் செய்வித்து பேசவைத்தும்
விநாயகரை மகிழவைத்ததுடன்
மாணவர்களுக்கு அறம் சார்ந்த
நற்சிந்தனைகளையும் புகட்டியது
மட்டுமல்லாது ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருந்தபோதும்
சிறீவேலுப்பிள்ளை வித்தியாசாலையை
கல்வி நிலையில் உயர்த்தியும் வைத்திருந்தார்.
பின்னர் வயாவிளான்
றோ.க.த.க வுக்கு இவர் மாற்றலாகி
அங்கேயும் பாடசாலை முதல்வராகக்சேவை செய்து கல்வி உலகின்கலசமானார்.
அன்னார் வாழ்க்கையின்
இறுதிக்காலத்தில் தனது
கடைக்குட்டி நந்தகுமாரனின்
அரவணைப்பில் கனடா
தேசத்தில் இருந்த போது
காலன் அவரைக் கவர்ந்தான்.
பூலோக வாழ்க்கையை முடித்த
அவரது ஆத்மா மேலோகத்தில்
அமைதியாக சாந்தியடையவும்
பிரிவுத்துயரால் வாடும் அவரது
குடும்பத்தார், உறவினர்களுக்கு
மன வலிமையைக் கொடுக்கவும்
இறைவனை வேண்டுவோம். 🙏