வயவையூர் மக்களுக்கு அன்பான அவசர வேண்டுகோள்.

76

மாதம் தோறும் பௌர்ணமி வந்தாலும் சித்திரை மாதத்துப் பௌர்ணமி சிறப்பானது. 

வெக்கையின் தகிப்பில் தவிக்கும் உயிர்களுக்கு குளுமையைக் கொடுப்பது சித்திரை முழு நிலவு..

வசந்த காலத்தின் தொடக்கமாகவும் சொல்லப்படுவது சித்திரா பௌர்ணமி..

தாயை இழந்தவர்கள் தாய்க்காக விரதம் அனுட்டிப்பதும் இதே சித்திரை பௌர்ணமியிலேயே..

அகதியாக அலையிம் எங்கள் தவிப்பை தீர்க்க வருகின்ற சித்திரா பௌர்ணமியை பயன்படுத்துவோம்..

எங்கள் ஊரிலும் எங்கள் வாழ்விலும் வசந்தம் மலர 19/04/2019 அன்று வருகின்ற சித்திரா பௌர்ணமியை பயன்படுத்துவோம்..

எங்கள் வயவை அன்னையை, எங்கள் சொந்த மண்ணை நாங்கள் அடைய 19/04/2019 அன்று பிள்ளையார் கோவில் பூசையிலும் தொடர்ந்து நடைபெறும் வயவை மண்ணை விடுவிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய கலந்துரையாடலிலும் கலந்து கொள்வோம்.

வன்னிப் பெரு நிலப்பரப்பில் வசிக்கும் வயவையூர் மக்கள் இந்தப் பூசையிலும், கலந்துரையாடலிலும் பங்குபற்ற, பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

காலை 6 மணிக்கு தேவிபுரத்திலிருந்து புறப்படும் பேருந்து, காலை 7 பணிக்கு பரந்தன் சந்தியை வந்தடையும்.

கிளிநொச்சியை அண்டிய பகுதியில் வசிக்கும் வயவையூர் மக்களுக்காக இந்த ஏற்பாட்டை செய்துள்ளார்கள் ஏற்பாட்டாளர்கள்.

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள 0771528317

நாங்கள் வசிக்க பல இடங்கள் இருந்தாலும் நாங்கள் வாழ இருக்கும் ஒரே இடம் எங்கள் வயவை மண்தான்…

அதை மீட்டெடுக்க வேண்டியது ஒவ்வொரு வயவனின் பொறுப்பாகும்.

எனவே 19/04/2019 அன்று அனைத்து வயவர்களும் ஒன்று திரள்வோம்.