வயவையின் பெருமிதம் – செல்வன் ஜெனோசன் – ஜேர்மனி

2980

பல்துறை வல்லுனர்களை உலகுக்களித்த பெருமைக்குரியது வயவை மண். கால ஓட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளாக குடிகளின்றி வெறிச்சோடிய அம்மண்ணின் பெருமை, அங்கே வேர் கொண்டு பன்னாடுகளில் கிளிபரப்பிய புதிய தலைமுறையால் மீண்டும் மீண்டும் பேணப்பட்டு வருகிறது. அவ்விதத்தில் வயாவிளானைப் பெருமிதப்படுத்திய பலருள் ஒருவராகத் திகழ்கிறார், ஜேர்மனியில் வசிக்கும் குத்துச்சண்டை வீரரான செல்வன் ஜெனோசன்.

2013 டிசம்பரில் குத்துச் சண்டைப் பயிற்சியைத் தொடங்கிய இவர் 2014 இல் களம் கண்டார். களம் கண்ட குறுகிய காலத்திலேயே தெற்கு ஜேர்மனியின் வாகையாளர் ஆனார்.

தொடர் கடினப் பயிற்சியாலும் மன உறுதியாலும் அடுத்த ஆண்டே (2015) ஜேர்மனியின் சாம்பியன் ஆனார்.

வெற்றி பெற்றோம் என்று இறுமாந்து விடாது, மீண்டும் மீண்டும் கடினமாக உழைத்து 2016 இல் ஜேர்மனியின் சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக்கொண்டார்.

குறுகிய நேரத்தில் எதிராளியை வீழ்த்தி சாதனை படைத்த இவரின் வெற்றிப்பயணம் தடை இன்றித் தொடர வயவன் இணையம் வாழ்த்துகிறது.

நான் வயாவிளானைச் சேர்ந்தனான் என்று பெருமையுடன் கூறும் இவரால் வயவை மண் மேலும் பெருமிதம் அடையும் என்பது உறுதி.