வயாவிளான் மத்திய கல்லூரியின் கூரைகளின் ஒரு பகுதியில் சூரிய மின் கலத் தொகுதி 15/02/2018 அன்று பொருத்தப்பட்டது. அனு உலை மூலமும், இரசாயன எரிபொருள் மூலமும் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுவதால் ஏற்படும் சூழல் மாசடைதலைக் குறைக்க காற்றாலைகள், நீர்வீழ்ச்சிகள், சூரியச்சக்தி மூலம் மின்சக்தி பெறப்படுவது அவசியமான நிலையில், வயாவிளான் மத்திய கல்லூரியின் இம்முயற்சி போற்றுதலுக்குரியதாகும்.
இச்சூரியக் கலங்களைப் பொருத்துவதற்கான நிதி வளத்தை (ரூபாய் 550000), வயாவிளானைச் சேர்ந்த அமரர்களான திரு.பொன்னர் நாகமுத்து மற்றும் அவருடைய பாரியார் நாகமுத்து சின்னம்மா அவர்களின் நினைவாக, அவர்களுடைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் வழங்கி இருந்தனர். இக்குடுமபத்தின் இப்பாரிய உதவி மதிப்பளித்துப் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
இப்பணிகளை ஒருங்கிணைத்த வயாவிளான் மக்களின் மீளெழுச்சிக்கான உதவும் கரங்களின் சேவைக்கும் வயவன் இணையம் நன்றியைத் தெரிவுத்துக் கொள்கிறது.