“ஓவியங்கள் மௌனமாகப் பேசும் தன்மை கொண்டவை.” என ஓர் அறிஞர் சொன்னார்.
மனதை ஓர் புள்ளியில் குவிப்பது தியானம் எனின் ஓவியம் வரைவதும் ஒரு வகைத் தியானமே ஆகும்.
தாய்த் தமிழகத்தின் பழம்பெரும் ஓவியங்கள் உள்ள சித்தனனாவாசலின் ஓவியங்கள் கூட தியானத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
அவை சித்தர்களால் வரையப்பட்டது என்பதும் அதற்கு சான்றாய் அமைகிறது.
புத்தபிரானின் இந்த உருவத்தை எந்தன் பெறாமகள் செல்வி சி.கனிமொழி வரைந்தாள்.
இதைப் பார்த்த போது இரத்தக் கண்ணீர் சிந்தும் புத்தபிரானின் உருவம் என் மனக்கண்ணில் வந்தது.
1983 களில் மகாஜனாக் கல்லூரி மதிலில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில் அந்தப் படம் இடம்பெற்று இருந்தது.
இனி அப்படியொரு சுவரொட்டியைத் தமிழர்கள் ஒட்டமால் இருக்க சகோதர இனம் துணை வேண்டும்.
மனிதவுரிமைகளின் மாண்பு மிதிக்கப்படாமல் மதிக்கப்பட வேண்டும்.
நல் எண்ணம் நம் எண்ணம்! நின்
துர் எண்ணமதை தூர ஓட்டு சோதர இனமே!