பசுபிக் கடலில் புதிதாகத் தோன்றிய அழகிய தீவு

137

கடலுக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் பசுபிக் கடலில் ஒரு சிறு தீவு புதிதாக உருவாகியுள்ளது.

உலகில் உள்ள பல தீவுகள் எரிமலை வெடிப்பால் ஏற்பட்டதாகச் கூறப்பட்டாலும் இந்த நூற்றாண்டிலும் கடந்த நூற்றாண்டிலும் புதிதாக எந்தத் தீவும் உருவாகவில்லை. இந்நிலையில் அண்மையில் உருவான இந்தத் தீவு நாசா விஞ்ஞானிகளை மகிழ்வில் ஆழ்த்தியுள்ளது.

புதிய பள்ளிக்கு முதன் முதலில் செல்லும் பிள்ளையின் மனநிலையோடு அத்தீவுக்குச் சென்று ஆராய்ந்துள்ளார்கள் விஞ்ஞானிகள். அண்ணளவாக ஒரு சதுர மைல் பரப்பளவைக் கொண்ட இத்தீவில் சல்லிக் கற்கள் நிறைந்த கண்டல் நிலம் காணப்படுகிறது.

செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களில் சமதரை போல் காட்சி அளித்த தீவு நேரில் போன போது மேடு பள்ளமாகக் காணப்பட்டுள்ளது. 

சல்லிக் கற்கள் நிறைந்த ஈரலிப்பான கண்டல் நிலத் தீவில் சிறு செடிகளும் செடிகளில் வண்ணப் பூக்களும் அழகாகத் தென்பட்டுள்ளன. ஒரு விதத்தில் பூமி தோன்றிய முறையப் பிரதிபலிப்பதாக விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதே போன்ற நிலங்கள் செவ்வாய்க் கிரகத்தில் இருப்பதால் ஒப்பீட்டு ஆய்வுகளுக்கு இத்தீவு பேருதவியாக இருக்குமென நாசா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

நடுக்கடலில் தோன்றிய மீச்சிறு தீவு; மீண்டும் கடலுக்குள் அமிழ்ந்து மறைந்து விடும் என்று விஞ்ஞானிகள் எதிர்வு கூறிய விஞ்ஞானிகள் பிறந்ததும் இறக்கப் போகும் குழந்தைக்கு பெயர் எதற்கு என்று எண்ணினர் போலும்.

அத்தீவுக்குப் நிரந்த்தரமான ஒரு பெயரை இடாமல், ஹுங்கா டோங்கா ஹுங்கா ஹாபாய் (Hunga Tonga Hunga Ha’apai) எனத் தற்காலிகமாக ஒரு பெயரைச் சூட்டியுள்ளர்.

 ஆனாலும் விஞ்ஞானிகளின் எதிர்வு கூறலை பொய்யாக்கும் விதத்தில் மிக மிக நிதானமாக வளர்ந்து வரும் இத்தீவு விஞ்ஞானிகள் மனதில் ஒரு வித கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அங்கே செல்ல இயலாவிடினும் காட்சியாகக் கண்டு மகிழ்வோம்.