அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்ட கதை

387

அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையை ஒன்றை நம்பி இன்னொன்றை தவற விட்ட சந்தர்ப்பத்திற்காகப் பயன்படுத்தி வருகின்றோம். இன்னும் சிலரோ “ஊரானை நம்பி உடையவனை கைவிட்டதை” அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்ட கதை என்பார்கள்.

இவ்விரு பயன்பாடும் பழமொழியின் மேலோட்டப் பார்வையில் உருவானவை. உண்மையில் அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்ட கதை ஆழமான அர்த்தம் உடையது.

கணவனும் மனைவியும் குடும்பம் நடத்துகின்றார்கள். (முயற்சி/உழைப்பு)

நீண்ட நாட்களாகியும் அவர்களுக்குப் பிள்ளை இல்லை. மனைவி கடவுளை வேண்டி நேர்த்தி வைத்து அரச மரத்தைச் சுற்றிப் பிள்ளைப் பேறு கேட்கிறாள். (நம்பிக்கை)

கொஞ்ச நாளில் அவள் தாயாகி விடுகிறாள்.. (வெற்றி)

இதைப் பார்த்த இன்னொருத்தி அரச மரத்தைச் சுற்றினால் பிள்ளை பெற்று விடலாம் என்று கணவனைக் கைவிடுகிறாள்.. அவள் அம்மாவாகி இருப்பாளா?

அதாவது வெறும் நம்பிக்கை (அரசன்) இருந்தால் மட்டும் வெற்றி கிட்டாது. உழைப்பு/முயற்சி (புருசன் இருந்தால் தான் வெற்றி கிட்டும்.

ஆக அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்ட கதையின் கருத்து நம்பிக்கையை நம்பி உழைப்பைக் கைவிட வேண்டாம்..