“சண்டைக்கு பிந்து சபைக்குப் முந்து” என்பது எமது வழக்கில் உள்ள பழமொழி ஆகும். சண்டை என்றால் பிந்திப் போ சாப்பாட்டுக்கு முந்திப் போ என்ற பொருளுடன் இது புழக்கத்தில் உள்ளது. இது சரியாக இருக்குமா என்று தேடிப்பார்த்தால், பல்வேறு மாதிரியான பொருள்களைக் அறிய முடிந்தது.
“சண்டைக்குப் பின் தீ.. சபைக்கு முன் தீ” என்றது “சண்டைக்கு பிந்து; சபைக்கு முந்து” என மருவியதாக சொல்லப்படுகிறது. இது திருப்தி தரவில்லை.
என்னைப் பொறுத்தவரை பின்வறுமாறு இருக்கலாம். சண்டை(வன்முறை)க்கு போகப் பின் நில். சபைக்கு(சமாதானத்துக்கு) போக முன் நில் என்ற அர்த்தத்தில் இந்தப் பழமொழி சொல்லப்பட்டிருக்கலாம். ஆனாலும் இது பூரண திருப்தி இல்லை.
சண்டை வேண்டாம் என்று ஏதாச்சும் சொல்லி இருப்பார்களா என்று யோசித்ததில், “சண்டைக்கு முன் தீர்.. சபைக்குப் பின் தீர்” என்ற பழமொழி மருவி இருக்கலாம் என்ற முடிவுக்கு வர முடிகிறது.
அதாவது என்ன பிரச்சினையாக இருந்தாலும் சண்டைக்குமுன்/வன்முறைக்கு முன் தீர்.. அதே போல என்ன பிரச்சினையாக இருந்தாலும் சபை குழப்பாமல் சபைக்குப் பின் தீர்.. என்ற பொருள் பொதிந்த பழமொழி காலப்போக்கில் “சண்டைக்கு பிந்து.. சபைக்கு முந்து” என்று மருவி இருக்கலாம்.