மாமியார் உடைத்தால் மண்குடம்.. மருமகள் உடைத்தால் பொன்குடம்..
செய்த நபரைப் பொறுத்து எதிர்வினையாற்றுவது எம்மிடை உள்ள பழக்கம். அதை வெளிப்படுத்தும் முகத்துடன் இப்பழமொழியை நாம் பயன்படுத்துகின்றோம். ஆனால் உண்மை இப்பழமொழியின் உண்மையை அர்த்தம் வேறு.
இதில் மண்ணும் பொன்னும் புகுந்த காரணம் என்ன? மண்ணும் பொன்னும் எக்காலமும் பெறுமதி குறைவதில்லை. வாங்கி வைப்பவனுக்கு நட்டத்தை வழங்குவதில்லை. உயர்வின் எடைக்கற்களாகவும் இவை பயன்பாட்டில் உண்டு. அதனால் மண்ணும் பொன்னும் இங்கே வந்தன.
மாமியாரும் மருமகளும் இங்கே நுழைந்த நோக்கம் என்ன?
ஒரு குடும்பம் உய்ய மாமியாரும் மருமகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம். அதனால் மாமியாரும் மருமகளும் உள்ளே வந்தார்கள். ஆனால் அவர்களை கையாண்ட விதம் தவறாக உள்ளதே..?!
“மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்.. மருமகள் உழைத்தால் பொன்னுக்கு உரம்” எனும் பழ மொழி மருவியதால் வந்த மாய மொழி இது..
ஆம்!
மாமியார் மட்டும் குடும்பத்தில் உழைத்தால் மட்டும் போதாது.. மருமகளும் குடும்பத்துக்காக உழைக்க வேண்டும். அப்போதான் அக்குடும்பம் உயர்வு பெறும்..
அனைவரும் ஒற்றுமையாக உழைத்தால் உயர்வு நிச்சயம் என்ற அகலப் பார்வையும் இப்பழமொழிக்குப் பொருந்தும்..