சாதியத்தை சாக்காட்டுக்கு அனுப்புவதன் மூலம் எம் மாவீரருக்கு சிறியதோர் கைமாறாவது செய்வோம்.

மக்களின் போர்க்கால மருத்துவ சேவகனாக
எங்கள் ஊர்களெங்கும் ஓடிய குருதியைப் பார்த்தேன்.

ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக பார்த்தேன்.

செந்தமிழனின் செங்குருதியில் சாதிய வேறுபாட்டை அடியேன் பார்க்க முடியவில்லை.

வெற்றுக் கண்ணாலும் பார்த்திருக்கிறேன்.

பரிசோதனைக் கூடத்து நுணுக்குக்காட்டியிலும் பார்த்திருக்கிறேன்.

காயமடைந்தவர்களுக்கு குருதி ஏற்ற முன்னர் DT எனப்படும் நேரடிப் பரிசோதனை செய்தே குருதி மாற்றீடு செய்ய வேண்டும்.

அவ்வாறான நேரடிப் பரிசோதனைக்காய் அடிக்கடி Microscope 🔬 ஊடாகவும் தமிழர் குருதியை பார்த்திருக்கின்றேன்.

எந்தவித வேறுபாட்டையும் யான் பார்க்கவில்லை.

நவீன பரிசோதனைகளின் ஆய்வு முடிவொன்றையும் அண்மையில் படிக்கவேண்டி இருந்தது.

ஆம், DNA 🧬 ஆய்வு முடிலும் இல்லை.

ஏன்?, அலை வந்து மெல்லெனத் தாலாட்டும் மாங்கனித்தீவில் மூவினத்தைச் சேர்ந்த மக்களிடையே கூட பெரியளவில் DNA வேறுபாடுகள் இல்லையாம்.

இந்நிலையில் தமிழன் தமக்கிடையே சாதிய வேறுபாட்டை எப்படிக்கண்டு பிடித்தான்..?🤔

முழுக்க முழுக்க வட இந்தியாவில் இருந்து தமிழர்களிடையே புகுத்தப்பட்ட ஒரு அருவருப்பான பொருள் சாதியம் ஆகும்.

“ஜாதி” எனும் வடமொழிச் சொல்லே பின் வந்த நாட்களில் சாதி எனவாகிய விடையத்தை ஆழ்ந்து நோக்கினால் புரியும்.