கேப்பாப்புலவு நிலமீட்புப் போராட்டத்தில் ஆசிரியப் பெருந்தகையின் அர்ப்பணிப்புள்ள சேவை

115

 

“எளிமையும் தெய்வீகக் களையும் ஒருங்கே வீசும்” இந்த ஆசிரியப் பெருந்தகை தெருவில் இறங்கி அறவழியில்போராடுவதுடன் சமகாலத்தில் எழுத்தறிவிக்கின்றார்.

பெருமதிப்புக்கும் அன்புக்குமுரிய திருமிகு சோதிநாதன் ஆசிரியர் அவர்களைத் தெரியாதவர்கள் எங்கள் வன்னிப் பெருநிலப்பரப்பில் இருக்க முடியாது.

பல நூறு கல்வியாளர்களை, பிறருக்காகவும் வாழும்/உழைக்கும் தேசப்பற்றுமிகு மானுடர்களை எம் மண்ணில் உருவாக்கிய பெரும் சிற்பி இவர்.

மாவீரன் பண்டாரவன்னியன் வரலாற்றில் இடம் பிடித்த பண்டாரவன்னியனின் ஆசிரியரும் கரிக்கட்டுமூலையைச்
சேர்ந்தவர்.

அஃதே,

அந்த மண்ணில் பிற்காலத்தில் அவதாரம் எடுத்த பல மூத்த போராளிகளின் அன்புக்கும் மதிப்புக்குமுரிய ஆசிரியராகவும் இருந்தவர்.

எப்போதுமே தேவை அறிந்து
சேவை செய்பவர்.

தெருவெளியில் இறங்கி மாதக் கணக்கில் போராடிய கேப்பாப்புலவு மக்களின் குழந்தைகளுக்கு அந்த தெருவோரத்திலேயே தன் அறப்பணியாகிய ஆசிரியப்பணிதனை தொடர்கின்றார்.

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்த காலத்தில் அவர் தம் திருப்பாதங்களைத் தொட்டு ஒரு முறை ஆறுதல் சொன்னேன் என்பது பெருமை தருகிறது.

ஆம், காலில் படுகாயமடைந்து என்பு முறிவுடன் பல நாள் துன்பப்பட்ட ஆசிரியப் பெருந்தகை நீண்ட நாட்களின் பின் குணமடைந்தார்.

அன்று போல் இன்றும் எம் மக்களுக்காக அவர் பயணப்படுவது ஆறுதலை மட்டுமல்ல எம்முள் ஓர் உத்வேகத்தையும் தெம்பையும் தந்து நிற்கிறது. 🙏

 

மேலும் பல தகவலுக்கு

https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D