அழிக்க முடியா(ததா) சாதிய ஏற்றத் தாழ்வு.

113

தன் மேலாதிக்கத்தை நிலை நாட்ட நாடுகளைக் கைப்பற்றி நாசம் செய்தான் ஹிட்லர். அதனால் மற்ற நாடுகள் இணைந்து ஹிட்லரை எதிர்த்தன ஹிட்லர் அழிக்கப்பட்டான். ஆனால் ஹிட்லர் கொண்டிருந்த மேலாதிக்கம் அழிக்கப்படவில்லை. ஏனெனில் ஹிட்லர் கொண்டிருந்த மேலாதிக்க நிலைப்பாட்டைத்தான் அவனை அழித்த நாடுகளும் கொண்டிருந்தன.

இதை ஒத்ததுதான் இன்றைய சாதி ஒழிப்புப் போராட்டமும். மேலாதிக்க சாதியை ஒழிக்கத் துடிக்கும் ஒவ்வொரு சாதியிடமும் மேலாதிக்க எண்ணம் உண்டு. 

தாழ்வு காட்டும் சாதி ஒன்றை எதிர்க்க இணைந்த ஏனைய சாதிகளும் சாதி ஏற்றத்தாழ்வைக் கடைப்பிடிக்கும். தன்னை ஒரு சாதி தாழ்வாகக் கருதுகிறது என ஆத்திரம் அடையும் சாதி இன்னொரு சாதியை தாழ்வாகக் கருதிப் பொருதும். தன்னை மேலாகக் கருதிப் பெருமை கொள்ளும்.  இந்நிலையில் சாதிய ஏற்றத் தாழ்வு எவ்வாறு இல்லாமல் போகும்.

ஆம்! சாதிய ஏற்றத் தாழ்வு காணாமல் போக வேண்டும் எனில், எல்லாச் சாதியினரும் கூறு கெட்ட சாதீய ஏற்றத் தாழ்வை விட்டு வெளியேற வேண்டும். இல்லையேல் எவ்வித சாதீய ஏற்றத் தாழ்வின் அழிவும் சாத்தியமில்லை. வயவையூரும் இதற்கு விதிவிலக்கல்ல.