காடுகளில் காட்டாறுகள் கரை புரண்டு ஓடுவது உண்டு!
கரைகளை அறுத்தோடும்
காட்டாறுகள்
எங்கிருந்து பாய்கின்றது?
எத்திசை நோக்கிப் பாய்கின்றதென சாதாரண மனிதர்களால் கிஞ்சித்தும் பார்க்க முடிவதில்லை!
காகங்களைக் காட்டுக்கு தூதனுப்பி நாங்கள் சேதி சொன்ன காவல் தெய்வங்களை கரடிகள் காட்டுக்குள் காத்தன. இயற்கை அவர்கள் ஆசானாக மட்டும் அல்ல கடவுளாகவும் இருந்திருக்கிறது
விந்தை இதுவென காட்டாறுகள் எமை வியக்க வைத்தாலும் மாரிகாலம் முடிந்தால் அவை வற்றி வரண்டுவிடும்!
ஆனால்…
கரடிகளோ நிலத்தின் கீழ் ஓரளவு ஆழத்தில் நீர் இருப்பதை முகர்ந்து அறிந்து கொள்ளும் தனித்துவ திறமை கொண்டவை!
கரடிகள் தன் பலம் கொண்டு குழி தோண்டித் தாகம் தீர்க்கும்!
வேர்கள் இருந்தால் என்ன?,
விழுதுகள் இருந்தால் என்ன?….
பிக்கான்,கோடரி,
மண்வெட்டிகள் இல்லாமலே தன் கூரிய நகங்களின் துணை கொண்டு காரியத்தைக் கனசச்சிதமாய் முடிக்கும்!
அந்தக் குண்டுகள் அல்லது குழிகளே “கரடிக்குண்டு”என அழைக்கப்படும்!
ஆம்,
நாடு காத்த வீரர்களை
காடு காத்த அந்தக் காலத்தில் தாகம் தீர்ப்பதும்
அக் காணரும் வீரர்களுக்கு பெரும் சவாலாய் அமைவதுண்டு!
காடுகளில் வளரும் நீர்க்கொடிகளும் எல்லா நேரமும் கைகொடுப்பது இல்லையாதலால் கரடிகளே கைகொடுத்து உதவுவதுண்டு!
“#கரடிக்குண்டு”களில் தாகம் தீர்த்து தாயகம் காத்த மாவீரர்களின் கதைகளையும் எப்படி எப்படி எங்கள் இளையோருக்கு சொல்வேன்????……
ஐய்யகோ!!!
ஓர்மமும் வீரமும் கொண்ட அந்த வீர நெஞ்சங்களின் காதைகளைச் செப்பிட என் ஆயுள் போதாதே….???
என் செய்வேன்
என் தேவனே!
- கதை ஆதாராம் Dr.முரளி மகேஷ்வரன்-