அமைதி வில்லன் : ஹெப்படைட்டிஸ் C – 02

379

மூலக்கூறு குளோனிங் முறையில் இந்த ஹைப்படைட்டிஸ் -சி வைரஸ் கண்டறியப்பட்டது 1989 -ல்தான். (டாக்டர் Choo அவர்கள்.)

இன்னைக்கு உலகத்தில் உங்களைப்போல இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவங்க கிடைச்ச ஆராய்ச்சிகளின்படி கிட்டத்தட்ட 20 கோடி பேர்.  (உலக மக்கள் தொகையில் 3 சதம்).  (நிஜத்தில் இதைவிட அதிகம் இருக்கும்..)

குற்றவாளிகளை அடையாளம் காட்ட கணினி மூலமா உத்தேசப் படம் வரைந்து அதை வச்சு தேடற அதே நிலைதான் இந்த வைரஸூக்கான தேடலும்..

இந்த வைரஸ் சுரக்கும் புரதங்களை வச்சு, இதன் RNA இவையாத்தான் இருக்கும்னு தீர்மானிச்சு இந்த வடிவில் இருக்கலாம்னு அனுமானுச்சு வச்சிருக்கோம்.

ஆனா இந்த வில்லனை இன்னும் முழுசா பார்க்குற அளவுக்கு இன்னும் அதன் வடிவம் பிடிகுடுக்கல..

தெரிஞ்சவரிக்கும் இதன் RNA கட்டமைப்பு 3000 அமினோஅமிலங்கள் உள்ளதா இருக்கு. இதை ஒரு நீண்ட வார்த்தைக்கு ஒப்பிடலாம்.

https://vayavan.com/?p=8672

இந்த வைரஸை (வார்த்தையை) பிரதி எடுக்கும்போது நூற்றுக்கு 99.9 சதம் சரியான பிரதி வரும். உதாரணமா = ராஜகோபாலாச்சாரியார் = ராஜகோபாலாச்சாரியார். 0.1 சதம் ஏதோ பிழையுடன் பிரதி ஆக்கப்படும். = ரோஜகோபாலாச்சாரியார்.

ரோஜகோபாலாச்சாரியார் அதே போல் பிழையாகவே பற்பல பிரதிகள் ஆக, எதோ ஒரு பிரதி ரோஜகேபாலாச்சாரியார் என இன்னொரு பிழை கூடிய பிரதியாக….

பல காலம் சென்று இப்பிரதிகளைக் கண்டால்..
ராஜகோபாலாச்சாரியார் – 91 சதம்
ரோஜகோபாலாச்சாரியார் – 5 சதம்
ரோஜகேபாலாச்சாரியார் – 2 சதம்
ரோஜகேபலாச்ச்சாரியார் – 1.3 சதம்
ரோஜகேபலாச்சாரியர் – 0.3 சதம்
….. இப்படி ஒரு கலவையாய் இருக்கும்…( Quasispecies..)

ஒரு மருந்து “ராஜகோபாலாச்சாரியார்” என்ற பிரதிகளை மட்டும் அழிக்கும் சக்தி உள்ளது என்றால்… மற்ற பிழைப்பிரதிகள் தப்பிப் பிழைப்பது மட்டுமல்லாமல், மருந்துக்குக் கட்டுப்படாத இப்பிழை வைரஸ்கள் மட்டுமே கட்டுப்பாடு இல்லாமல் பல்கிப்பெருகும்…

கொடுத்த மருந்து முதலில் வெல்வது போல் தோன்றினாலும்…  விரைவில் இந்த Mutant வைரஸ்களே வென்று ஓங்கி நிற்கும்…

ஹெப்படைட்டிஸ் – சியின் சிகிச்சைக்கு சவாலே – இந்த மாறி மாறி அவதாரம் எடுக்கும் வைரசின் அதீத சர்வைவல் குணம்தான்…

இந்த மாறும் குணத்தாலேயே தக்கனூண்டு இருக்கிற இந்த வைரஸ¥க்குள் (மொத்த விட்டமே அதிகபட்சம் 60 நானோமீட்டர்தான்.. அகத்திய வைரஸ்..) 6 கோத்திரப் பிரிவுகள் (Genotypes) இருக்கு.

1 முதல் 6 வரை..அமெரிக்கா, ஐரோப்பாவில் 1 பிரதானம்.. ஆப்பிரிக்காவில் 4 பிரதானம். இந்தியாவில் 3 … கொஞ்சமாய் 1ம் 2 ம்.. கோத்திரத்தை வச்சு வைரஸின் ரிஷிமூலம் அறியலாம். 1960 களில் ஹீர¡யின் ஊசிகள் வழியா ஆசியாவில் இருந்துபோன  3ம் கோத்திர வைரஸ்கள் இன்னும் மேல்நாடுகளில் இரண்டாம் இடத்தைப் பிடிச்சு சுத்திகிட்டிருக்கு…

Schistosomiasis என்னும் ஒருவகை ஒட்டுண்ணிப் புழுக்களைக் கொல்ல பலமுறை
ஊசி போடும் பழக்கம் இருந்த எகிப்தில் நூத்துக்கு 18 பேருக்கு இந்த வைரஸ் இருக்கு.
டிஸ்போஸபிள் ஊசி இல்லாக் காலங்களில் ஸ்டீல் பாத்திரத்தில் கொதிக்கவச்சா
(ஸ்டெரிலைசர்) போதும் என்ற அந்தக்கால ஞான அளவில்
“தான் செய்வது இன்னதென்று அறியாமல்” மருத்துவர்கள் செய்த
“அப்”பாவச் செயலின் பலன் இது..

எந்த வைரஸம் அதிகம் புழங்கும் பாவப்பட்ட ஆப்பிரிக்காவுக்கு அடுத்த இடம்..
நூத்துக்கு 12 பேர்.

பொதுவாய் நம் இந்தியதேசத்தில் இருந்து உறுதியான அறிவியல் முறையில்
இந்த நோய் இந்த அளவு (Epidemiology) என்று சொல்வது மிகவும் கம்மி.
பொருள் வேண்டும் – இவ்வாராய்ச்சிகள் செய்ய…
அவசர சிகிச்சை அளிக்கவே அடிதடி பட்ஜெட்..
அளந்து, வருமுன் காக்க முனைந்து செலவு செய்ய.. இன்னும் வளர்ந்த நாடாகவேண்டும்..
கலாம் கனவுகள் “மனோ”ரதம் ஏறுமா? -சிதம்பர ரகசியம்?