படத்தைப் பார்த்தாலே நாக்கில எச்சில் ஊருதில்ல..
சர்க்கரைப் பொடி தூவிய சாக்லேட் உருண்டை மாதிரியான இந்த யூரோப்பா ரொம்ப சுவாரஸ்யமான சந்திரன் கலிலியோ கண்டுபிடிச்ச நாலு சந்திரன்ல இது சின்னது.
இதோட குறுக்களவு 3100 கிலோ மீட்டர். நம்ம சந்திரனை விட இது கொஞ்சம் சின்னது.
ஆனா ஒரு விஷயம் கேளுங்க. சூரியக் குடும்பத்திலயே மொழ மொழன்னு யம்மா யம்மா அப்படின்னு இந்தச் சந்திரனைப் பார்த்துப் பாடலாம். அவ்வளவு ஸ்மூத்தா இருக்கும்.
பெண்ணோட முகத்தை ஏன் இந்தச் சந்திரனுக்கு ஒப்பிடலைன்னு கூட அப்பப்ப மனசில கேள்வி வரும்னா பார்த்துக்கோங்களேன்,
ஈரோப்பாவின் மேலோடு சிலிக்கேட் அதாங்க நம்ம மணலால் ஆனது. இதன் உட்கரு இரும்பால் ஆனதா இருக்கும்னு கணிப்பு.
இதை விட முக்கியமான மூணு விஷயங்கள் இருக்கு
1. இதன் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் இருக்கு (யுரேகா, யுரேகா…)
2. இதன் மேலோடு என்பது உறைந்த தண்ணீர்..
3. இந்த மேலோட்டுக்கு கீழே திரவ வடிவிலான நீர் இருப்பதாக சொல்றாங்க
[media]http://www.solarviews.com/raw/jup/eurint.jpg[/media]
இரும்பு உட்கரு, அதைச் சுற்றி இறுகிய மணற் பாறைகள், அதன் மேல் 100 கிலோ மீட்டர் உயரத்திற்குத் தண்ணீர், அதன் மேல் உறைந்த நீர், அதன் மேல் ஆக்சிஜன் இருக்கும் வளி மண்டலம்..
[media]http://upload.wikimedia.org/wikipedia/commons/8/88/EuropaInterior1.jpg[/media]
ஈரோப்பா மேல இருக்கிற வரிவடிவங்கள் மட்டுமே அதோட வழவழப்பான மேனியில் இருக்கும் சிறிய மேடுபள்ளங்கள்
இவையெல்லாம் சிறிய சிறிய பிளவுகள். இது யூரோப்பாவின் மேலோட்டுத் டெக்டானிக் தடுகள் நகர்வதால் உண்டாவதாக நம்பப் படுகிறது.. இந்தப் பிளவுகள் அதிகபட்சம் 20 கி.மீ அகலம் இருக்கலாம் என நம்பறாங்க
இந்தப் பிளவுகள் டெக்டானிக் பிளவுகள் நகருவதால் உண்டாகும் வெற்றிடத்தை கீழ இருக்கிற தண்ணீர் பொங்கி உறிவதால் கலர் மாறி கோடு கோடா தெரியறது அப்படின்னு தியரி சொல்றாங்க.
இங்கயம் அதிகமா விண்கல் விழிந்து அம்மிக்கல் மாதிரி கொத்தல் கிடையாது. அதனால யூரோப்பாவும் இளமை பொங்கும் சந்திரனாத்தான் இருக்கணும்னு சொல்றாங்க..
பாருங்க.. பக்கத்தில ஐயோல எக்கச் சக்கமா கரண்ட் இருக்கு. இங்க தண்ணி ஆக்சிஜன் எல்லாம் இருக்கு..
இதை விட்டுட்டு செவ்வாய் செவ்வாய்ன்னு வெறும் வாயை மெல்றாங்க..