வயாவிளான் மக்கள் ஒன்றியம் – பிரான்சு விடுக்கும் வேண்டுகோள்.

482

உவ்வாண்டு மே மாதம் 27 ஆம் நாளன்று, வயாவிளான் மக்கள் ஒன்றியம் பிரான்சு அமைப்பின் ஏற்பாட்டில் “வயவையூரின் ஒன்றுகூடல்” நடக்க உள்ளது.

பிரான்சின் புறகர்ப் பகுதிகளில் ஒன்றான Bondy இல்

salle Angela Davis
Rue de la philosophie
93140 Bondy

எனும் முகவரியில் 27/05/2018 ஞாயிற்றுக்கிழமை 10 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெற உள்ள இவ்வொன்று கூடலில் மண்ணின் மணங்குணத்துடன் கலை நிகழ்வுகளும் மலர் வெளியீடும் நடைபெற உள்ளது.

அதற்கு கவிதைகள், கட்டுரைகள், கதைகள், வயவையூரின் நிழல்கள் எனப் பல்சுவை ஆக்கங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றார்கள்.

இவை தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற, ஒன்றியத்தைத் தொடர்பு கொள்ளவும்.

-ஒன்றியத்தின் முக நூல் பகிர்விகிருந்து