நெஞ்சினில் நிலைத்த நெடுந்தகை!
*********************************
மண் பொறியியலில்
(Soil Engineering) சாதனை படைத்து விண் முட்டும் புகழ் ஈட்டிய சாதனைத் தமிழன்.
தமிழர்களின் விடியலை உள்ளன்புடன் யாசித்த ஒரு மாமனிதர் அழகைய்யா துரைராஜா அவர்கள்.
பெருமைகளின் பெருமைகளை தரிசித்த பெருந்தகை.
உன்னதங்களின் உச்சிதனை தொட்டுவிட்ட போதிலும் சாதாரண மக்களுடன் வாழ்ந்தவர்.
தமிழீழ மருத்துவக் கல்லூரியின் விரிவுரைகளுக்காய் யாழ் பல்கலைக்கழகத்தின் அப்போதைய பீடாதிபதியையும் விரிவுரையாளர்களையும் ஒத்துழைக்க வேண்டும் என ”அன்புரிமை”யோடு வேண்டுதல் விடுத்தவர்.
ஆரம்பத்தில் தமிழீழ விடுதலையுடனோ அல்லது இயக்கத்துடனோ பெரிய ஈடுபாடு ஏதும் இல்லாத விரிவுரையாளர்களும் இந்த பேராசிரியர் மீதான பற்றுதல் காரணமாக தமிழீழ மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளர்களை நிகழ்த்தினர்.
“அறம்” காத்த மாமனிதரை
“அகம்” தனில் ஆழநினைந்து
“கரம்”தனைக் கூப்பி
“சிரம்” தனை தாழ்த்தி
ஒன்றுபட்டு நிமிர்வோம்!🙏