திருமதி புஷ்பநாயகி தருமதுரை அவர்களின் 7ஆம் மாதநினைவு நாள்
அம்மா…
*
பசித்து வரும்
பிள்ளைகளுக்காய்
உணவாக்கி காத்திருந்து
உணர்வூட்டி உணவூட்டி
உரிமைக்காய் குரல்
தந்தவளே…
இருள் விலகாத
ஈழத் திசையெங்கும்
நீங்காத கரு முகில்
திரைக்குள்ளே
எம்மை முகிழ்ந்தெடுத்தவளே
..
வெண்மதியின் ஒளியூட்டி
வானுயர இசையூட்டி
விழி மலர்ந்து
நாம்
சிரிக்க அகம்மகிழ்ந்த
நிலாமகளே…
எம்மை சூரிய ஒளிக்கு
எரிந்து போன புல்வெளியாக
பொசிங்கி போக வைத்து
நீ சென்று விட்டாய்
அழ விழியில் நீர்
இன்றி
தவிக்கும் உன்
பிள்ளைகளை
திரும்பி பாரம்மா…
கருகிய நெஞ்சங்களில்
வீரியமற்று
கறுப்பு இசை
ஒலிக்க விட்டு
உறங்கி நீ போய்விட்டாய்
செவிகளில் ரீங்காரமிடும்
சோகங்களை
தொலைக்க
வழியின்றி தவிக்கிறோம்
பாரம்மா…
நீ தூங்கி விட்டாய்
தூங்கா இரவுகளை நாங்கள்
கடந்து வந்து
உன் பாதச்சுவடுகளை
தேடுகிறோமே அம்மா…
இ.இ.கவிமகன்