நாளொரு குறள் 24

585

நாள் : 24
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : நீத்தார்பெருமை
செய்யுள் : 4

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.

வித்து அது, அது எதற்கு வித்து? வைப்பிற்கு ஒரு வித்து. வையம் என்பதையே இங்கே வைப்பாகிறது.. வையம் என்பது வைப்பதற்குரிய இடம். அதாவது குடியிருக்கத் தகுந்த இடம். எப்படிப்பட்ட வையம்? வரனென்னும் வையம்.. வரம் பெற்ற வாழிடம் உருவாக சிறந்த வித்தாபா,

உரன் என்னும் தோட்டியான்… தோட்டியான் என்றால் சுத்தம் செய்பவன் என்று பொருள். காக்கையை நாம் ஆகாயத் தோட்டி என்று அழைக்கிறோம். காரணம் அது குப்பைகளை கிளறி உண்டு சுத்தம் செய்வதால்தான்.

உரம்- உறுதி என்பதே ஐந்து பொறிகளான ஐந்து புலன்களையும் காக்க வல்லது. உறுதி என்பது ஐம்பொறிகளையும் சுத்தமாக வைத்துக் கொள்கிறது. புலன் தடுமாற்றம் மன உறுதி இன்மையினாலேயே உண்டாகிறது.

ஆக

ஐந்து புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்து நல்வழி செலுத்துபவன், அவனைச் சுற்றி நல்ல குடி உருவாக காரணமான வித்தாகிறன்