அழகு

542



தமிழுக்கு அழகு செம்மொழி 

வள்ளுவனுக்கு அழகு திருக்குறள் 

கல்விக்கு அழகு அறிவூட்டுவது 

ஆசானுக்கு அழகு சிறந்த மாணவர்கள் 
எழுதுகோலுக்கு அழகு
நல்ல சிந்தனைகளை விதைப்பது 



சிந்தனையாளனுக்கு அழகு
நல்ல சமுதாயத்தை உருவாக்குவது 

கணினிக்கு அழகு
உலகை கைக்குள் அடக்கியது

விஞ்ஞானத்தின் அழகு
நன்மை தருவது 



ஊருக்கு அழகு
தன் மக்கள் செழிப்புற வாழ்வது 

நாட்டுக்கு அழகு
பட்டினி இன்றி மக்களை பேணுவது 



அன்புடன்

வ.பொ.சு.
-மாரிட்டி மண்ணின் மைந்தன்